பாலிவைனைல் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: vi:Polyvinyl Clorua
சிNo edit summary
வரிசை 35:
[[Image:PVC-3D-vdW.png|thumb|right|275px|பாலிவினைல் குளோரைடு]]
 
'''பாலிவைனைல் குளோரைடு''' (இ.வ. பொலிவனைல்) என்பது, பரவலாகப் புழக்கத்திலுள்ள ஒரு [[நெகிழி|பிளாஸ்ட்டிக்கு]](நெகிழி) ஆகும். வருமான அடிப்படையில் நோக்கும்போது இது [[வேதியியல் தொழில்துறை]]யின் (இரசாயனத் தொழில்துறை) பெறுமதி மிக்க [[வேதிப் பொருள்]]களுள் (இரசாயனப் பொருள்) ஒன்றாகும். இது சுருக்கமாக ''பிவிசி'' (PVC) என அழைக்கப்படுகின்றது. உலக அளவில் உற்பத்தி செய்யப்படுக்செய்யப்படுகின்ற பிவிசியின் 50% [[கட்டுமானத் தொழில்|கட்டுமானத் தொழிலிலேயே]] பயன்படுகின்றது. பிவிசியினால் உருவாக்கப்படும் கட்டிடப்பொருட்கள் [[விலை]] குறைந்தவை என்பதுடன் சுலபமாகப் பொருத்தப்படக்கூடியவை. அண்மைக்காலங்களில் பிவிசி, பாரம்பரியமான கட்டிடப்பொருட்களான மரம், [[காங்கிறீற்று]], [[உலோகம்]], [[களிமண்]] போன்ற பொருட்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பல வழிகளிலும் சிறப்பானதாகத் தோற்றும் இப் பொருளால் சூழலுக்கும், மனிதர்களின் உடல் நலத்துக்கும் ஏற்படக்கூடிய தீங்குகள் பற்றிக் கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், சூழல் பாதுகாப்பையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தி இயங்கிவரும் பல நிறுவனங்கள், பிவிசியின் பயன்பாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.
 
பொலிவைனைல் குளோரைட்டு, ஒரு கடினமான பிளாஸ்டிக்காகத், நீர்வழங்கும் அல்லது கழிவகற்றும் [[குழாய்]]கள், [[கிராமபோன்]] தட்டுக்கள், [[சாளரம்|சாளரங்களுக்கான]] சட்டங்கள் போன்ற ஏராளமான பொருட்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுகின்றது. சில வேதிப்பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் இதனை வளைந்து கொடுக்கக்கூடிய பொருளாக மாற்றமுடியும். இவ்வாறான பிவிசியைப் பயன்படுத்தித் [[தள முடிப்பு]]க்கள், மழை ஆடைகள், [[மின் கம்பி]]களுக்கான காப்பு உறைகள் போன்ற பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்யப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பாலிவைனைல்_குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது