"துணிப்புத் தகைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,074 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[நீர்மம்]] ஒன்று ஒரு பரப்பில் நகரும் போது, எதிர்படும் பொருட்பரப்புக்குச் செங்குத்தாகச் செயல்பட்டு அது துணிப்புத் தகைவை உண்டாக்குகிறது. மழைநீரால் ஏற்படும் நில அரிப்பு, சாலைத் துண்டிப்பு ஆகியவை இவ்வாறே உண்டாகின்றன.
 
== பொதுத் துணிப்புத் தகைவு==
 
நிரல் (சராசரி) துணிப்புத் தகைவு அல்குப் பரப்பில் செயல்படும் விசையாகும்.:<ref>{{cite book|last=Hibbeler|first=R.C.|title=Mechanics of Materials|year=2004|publisher=Pearson Education|location=New Jersey USA|isbn=0-13-191345-X|pages=32}}</ref>
 
:<math> \tau = {F \over A},</math>
 
இங்கு,
 
:{{mvar|τ}} = துணிப்புத் தகைவு;
:{{mvar|F}} = தரப்பட்ட விசை;
:{{mvar|A}} = அந்த விசை நெறியனுக்கு இணையாக அமையும் பொருளின் குறுக்கு வெட்டுமுகத்தின் பரப்பாகும்.
 
==பிற வடிவங்கள்==
 
===தூய நிலை===
 
தூயத் துணிப்புத் தகைவு, தூயத் துணிப்புத் திரிபுக்குக் ( {{mvar|γ }}) கீழுள்ள சமன்பாட்டால் உறவுபடுத்தப்படுகிறது:<ref>{{cite web|url=http://www.eformulae.com/engineering/strength_materials.php#pureshear|title=Strength of Materials|work=Eformulae.com|accessdate=24 December 2011}}</ref>
 
:<math>\tau = \gamma G\,</math>
 
இங்கு, {{mvar|G}} என்பது ஒருபடித்தான பொருளின் துணிப்பு மட்டு ஆகும். துணிப்பு மட்டு கீழுள்ள வாய்பாட்டால் தரப்படுகிறது.
 
:<math> G = \frac{E}{2(1+\nu)}. </math>
 
இங்கு, {{mvar|E}} என்பது யங் மட்டு ஆகும்; {{mvar|ν}} என்பது பாயிசான் விகிதம் ஆகும்.
 
===விட்டத்தின் துணிப்புத் தகைவு===
 
விட்டத் துணிப்புத் தகைவு என்பது விட்டத்துக்குத் தந்த துணிப்பு விசை உருவாக்கும் அகத் துணிப்புத் தகைவாக வரையறுக்கப்படுகிறது.
 
:<math> \tau = {fQ \over Ib},</math>
 
இங்கு,
:{{mvar|f}} = குறிபிட்ட இடத்தில் செயல்படும் மொத்தத் துணிப்பு விசையாகும்;
:{{mvar|Q}} = பரப்பின் நிலையியல் திருப்புமை (திருப்புதிறன்) ஆகும்;
:{{mvar|b}} = துணிப்புக்குச் செங்குத்தாக அமையும் பொருளின் தடிப்பு (அகலம்) ஆகும்;
:{{mvar|I}} =மொத்த வெட்டுமுகப் பரப்பின் உறழ்வுத் திருப்புமை ஆகும்.
 
விட்டத் துணிப்புத் தகைவின் வாய்பாடு சுராவ்சுகி துணிப்புத் தகைவு வாய்பாடு எனப்படுகிறது. இந்த வாய்பாட்டை 1855 இல் திமித்ரி இவனோவிச் சுராவ்சுகி முதன்முதலாக கணித வாய்பாடாகக் கொணர்ந்தார்.<ref>{{cite web|script-title=ru:Лекция Формула Журавского|url=http://sopromato.ru/pryamoy-izgib/formula-zhuravskogo.html |accessdate=2014-02-26 |work=Сопромат Лекции |language=Russian |trans-title=Zhuravskii's Formula}}</ref><ref>{{cite web|title=Flexure of Beams|url=http://www.eng.mcmaster.ca/civil/mechanicslectur-e/4flexurebeams1.pdf|work=Mechanical Engineering Lectures|publisher=[[McMaster University]]}}</ref>
 
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2515723" இருந்து மீள்விக்கப்பட்டது