அந்தாட்டிக்க வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்கோள்கள்: *விரிவாக்கம்*
வரிசை 4:
அந்தாட்டிக்க வட்டத்தின் இருப்பிடம் நிலையானதல்ல; ஏப்ரல் 28, 2018 நிலைப்படி இது [[நிலநடுக் கோடு|நில நடுக்கோட்டிற்கு]] தெற்கே 66°33′47.1″ பாகைகளில் உள்ளது.<ref>{{cite web|url=http://www.neoprogrammics.com/obliquity_of_the_ecliptic/ |title=Obliquity of the Ecliptic (Eps Mean) |publisher=Neoprogrammics.com |date= |accessdate=2014-05-13}}</ref> இதன் நிலநேர்க்கோடு புவியின் [[அச்சுச் சாய்வு|அச்சுச் சாய்வைப்]] பொறுத்துள்ளது; இந்த அச்சுச் சாய்வு நிலவின் சுழற்சியால் ஏற்படும் அலைகளின் விசையினால் 40,000-ஆண்டுக் காலத்தில் 2° வரை ஊசலாடுகிறது.<ref>{{cite journal |last=Berger |first=A.L. |date=1976 |title=Obliquity and Precession for the Last 5000000 Years |journal=[[Astronomy and Astrophysics]] |volume=51 |issue= |pages=127–135 |bibcode=1976A&A....51..127B}}</ref> தற்போதைய அந்தாட்டிக்க வட்டத்தின் நெட்டாங்கு தென்முகமாக ஆண்டுக்கு {{convert|15|m|abbr=on}} அளவில் நகர்ந்து வருகிறது.
 
==நள்ளிரவு சூரியனும் துருவ இரவும் ==
[[படிமம்:axial_tilt_vs_tropical_and_polar_circles.svg|thumb|400px|புவியின் அச்சுக்கோட்டின் சாய்விற்கும் (&#949;) அயன, துருவ வட்டங்களுக்குமுள்ளத் தொடர்பு]]
 
அந்தாடிக்க வட்டம் [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்திலுள்ள]] மிக வடக்கான அகலாங்கு ஆகும். இங்கு கதிரவன் தொடர்ந்து 24 மனிநேரம் தொடுவானத்திற்கு மேலோ அல்லது பகுதியும் கீழோ இருக்கும். இக்காரணத்தால் ஆண்டுக்கு ஒருமுறையேனும் இந்த வட்டத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் கதிரவன் [[நள்ளிரவுச் சூரியன்|உள்ளக நேரப்படி நள்ளிரவில் காணப்படும்]]. அதேபோன்று குறைந்தது ஒருமுறையேனும் பகுதியும் நடுப்பகலில் மறைந்திருக்கும்.<ref>{{cite book|last=Burn|first=Chris|title=The Polar Night|url=http://nwtresearch.com/sites/default/files/the-polar-night.pdf|publisher=The Aurora Research Institute|accessdate=28 September 2015}}</ref>
 
நேரடியான அந்தார்ட்டிக்க வட்டத்தில் உள்ள இடங்களில் இந்த நிகழ்வுகள், கொள்கையளவில், ஆண்டுக்கு ஒருமுறை நிகழும்: முறையே [[திசம்பர் கதிர்த் திருப்பம்|திசம்பர்]] மற்றும் [[சூன் கதிர்த் திருப்பம்|சூன்]] [[கதிர்த்திருப்பம்|கதிர்த்திருப்பங்களில்]] நிகழும். இருப்பினும், வளிமண்டல ஒளி விலகலாலும் [[கானல் நீர்]]களாலும் தவிரவும் கதிரவன் புள்ளியாகவின்றி ஓர் வட்டாகத் தெரிவதாலும் தெற்கத்திய வேனில்கால கதிர்த்திருப்பத்தின் போதும் நள்ளிரவுச் சூரியனை அந்தாடிக்க வட்டத்தின் வடக்கே 50 ′ ({{convert|90|km|abbr=on}}) வரை காண முடியும். இதே போன்று தெற்கத்திய குளிர்கால கதிர்த்திருப்பத்தின் நாளன்று அந்தாடிக்க வட்டத்தின் தெற்கே 50 ′ ({{convert|90|km|abbr=on}}) வரை பகுதி சூரியனைக் காண முடியும். இது கடல் மட்டத்திற்கானது. உயரம் செல்லச் செல்ல இந்த எல்லைகள் கூடும். ஆர்க்டிக் பகுதிகளை விட அந்தாட்டிக்க வட்டத்தில் கானல்நீர் விளைவுகள் இன்னமும் கண்ணைக் கவர்வதாக உள்ளன. இதனால் கதிரவன் உண்மையில் தொடுவானத்திற்கு கீழே இருந்தபோதும் பல ஞாயிறு தோற்றங்களையும் மறைவுகளையும் இக்கானல் நீர்கள் உருவாக்குகின்றன.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அந்தாட்டிக்க_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது