ஆவியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''ஆவியர்''' என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. <ref>திருமுருகாற்றுப்படை 176</ref> ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.<ref>ஆ+இன+நன்+குடி</ref> இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை வீரம் பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம்.
 
இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். [[முருகன் (அரசன்)|முருகன் நற்பேர் ஆவி]] என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். <ref>அகநானூறு 1</ref> வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். [[பேகன்|வையாவிக்கோப் பெரும்பேகன்]] <ref>பெருங்குன்றூர் கிழார் – புறம் 147,</ref> <ref>அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகன் - சிறுபாணாற்றுப்படை 85-86</ref> [[பதுமன்|வேளாவிக்கோமான் பதுமன்]] ஆகியோர் இப்பகுதியை ஆண்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/ஆவியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது