அமில-கார வினைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
=== அமிலம் தொரடர்பான அந்துவான் இலவாசியேயின் ஆக்சிசன் கோட்பாடு ===
அமிலங்கள், காரங்கள் தொடர்பான முதல் கருத்தியல் கோட்பாடு அந்துவான் இலவாசியேயால் 1776 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. இலவாசியேயின் பார்வையில் வலிமை மிகு அமிலம் என்பது ஆக்சோஅமிலங்கள் ([[நைட்ரிக் காடி]], [[சல்பூரிக் அமிலம்]] போன்றவை) தொடர்பானதாகவே இருந்ததால், அதிக ஆக்சிசனேற்ற எண்ணைக் கொண்ட அணு மைய அணுவாகவும், அதனை ஆக்சிசன் அணுக்கள் சூழ்ந்த நிலையிலும் இருக்கும் சேர்மங்களின் அடிப்படையிலேயே அமிலத்திற்கான வரையறையைக் கொடுத்துள்ளார். ஐதரோஆலோ காடிகளின் ([[ஐதரசன் புளோரைடு|HF]], HCl, [[ஐதரசன் புரோமைடு|HBr]] மற்றும் [[ஐதரசன் அயோடைடு|HI]])அமைப்பைப் பற்றி அறிந்திராத சூழ்நிலையில், கிரேக்க மொழியில் அமிலத்தை உருவாக்கும் தன்மையுடைய என்ற பொருளைத் தரும் ஆக்சிசனைச் சார்ந்து ஒரு வரையறையைத் தந்தார். இந்த வரையறை 30 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்திருந்தது. 1810 ஆம் ஆண்டில் [[ஹம்பிரி டேவி]], ஆக்சிசைனேய கொண்டிராத [[ஐதரசன் சல்பைடு]], [[ஐதரசன் தெலூரைடு]] மற்றும் ஐதரோஆலிக் அமிலங்கள் ஆகியவை அமிலத்தன்மை பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டி அமிலத்தன்மை என்பது ஒரு தனிமத்தைச் சார்ந்த பண்பல்ல என்றும், வெவ்வேறு பொருட்கள் அமைந்துள்ள தன்மையைப் பொறுத்து உருவாகும் பண்பு என்று கூறி தனது கருத்தை முன்வைத்தார். ஆனால், இலவாசியேயின் கருத்துக்கு மாற்றாக எந்த ஒரு புதிய கோட்பாட்டையும் டேவி முன்வைக்கவில்லை. <ref name=review1940>{{cite journal |title=Systems of Acids and Bases|last=Hall|first=Norris F.|journal=[[Journal of Chemical Education]]|date=March 1940|volume=17|issue=3|doi=10.1021/ed017p124|pages=124–128|bibcode= 1940JChEd..17..124H}}</ref> இலவாசியேயின் ஆக்சிசனைச் சார்ந்த அமிலம் தொடர்பான கோட்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றமானது, பெர்சீலியசால் முன்வைக்கப்பட்டது. அவர் அமிலங்கள் என்பவை அலோகங்களின் ஆக்சைடுகள் எனவும், காரங்கள் என்பவை உலோகங்களின் ஆக்சைடுகள் எனவும், தனது கோட்பாட்டில் தெரிவித்திருந்தார்.
 
=== அமிலங்கள் தொடர்பான லீபிக்கின் ஐதரசன் கோட்பாடு===
1838 ஆம் ஆண்டில், ஜஸ்டஸ் வான் லீபிக், அமிலம் என்பதை ஐதரசனைக் கொண்டுள்ள மற்றும் அந்த ஐதரசனானது உலோகத்தால் இடப்பெயர்ச்சி தக்கதாகவும் உள்ள பொருள் என வரையறை செய்தார். <ref name="liebig_1">{{harvnb|Miessler|Tarr|1991}}</ref><ref name=meyers_156>{{harvnb|Meyers|2003|page=156}}</ref><ref>{{harvnb|Miessler|Tarr|1991|p=166}} – table of discoveries attributes Justus von Liebig's publication as 1838</ref> இந்த மறுவரையறையானது, லீபிக்கின் அதிதீவிரமான கரிம அமிலங்களின் இயைபு தொடர்பான ஆய்வினடிப்படையிலும் ஆச்சிசனை அடிப்படையாகக் கொண்ட அமிலங்கள் என்பதிலிருந்து ஐதரசனை அடிப்படையாகக் கொண்ட அமிலங்களின் வரையறை தொடர்பான டேவியால் தொடங்கப்பட்ட முயற்சியை முடித்து வைப்பதாகவும் அமைந்தது. லீபிக்கின் வரையறையானது, முழுவதுமாக பட்டறிவு சார்ந்ததாக இருந்திருப்பினும், அரீனியசின் கோட்பாடு வெளிவரும் வரையிலான ஐம்பதாண்டு காலம் நிலைத்திருந்தது.<ref name="liebig_2">{{harvnb|Finston|Rychtman|1983|pp=140–146}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அமில-கார_வினைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது