ஏஞ்சலா லேன்சுபரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
| birth_name =எஞ்சலா பிரிகித் லேன்ச்பியூரி
| birth_date = {{Birth date and age|df=yes|1925|10|16}}
| birth_place = ரீஜென்ட்ஸ் பார்க், [[இலண்டன்]], இங்கிலாந்து<ref Name=Frontrow>{{cite web|url=http://www.bbc.co.uk/programmes/b03srj0y |title=Interview with Mark Lawson |website=BBC Radio 4 |date=February 3, 2014 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20160908204624/http://www.bbc.co.uk/programmes/b03srj0y |archivedate=September 8, 2016 |df= }} "I want to make one thing clear: I was not born in Poplar, that's not true, I was born in Regent's Park, so I wasn't born in the East End, I wish I could say I had been. Certainly my antecedents were: my grandfather, my father." (mins 3–4)</ref>
| occupation = [[நடிகை]], [[எழுத்தாளர்]], பின்னணிப் பாடகர்
| years_active = 1943–தற்போது வரை
வரிசை 21:
இவர் மத்திய [[இலண்டன்|இலண்டனில்]] உள்ள ரீஜன்ட்ஸ் பார்க்கில் உயர் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தார். இவரின் [[தந்தை]] எட்கர் லேன்ஸ்பியூரி ஒரு [[அரசியல்வாதி]] ஆவார். இவரின் [[தாய்]] மொயான மக்கில் அயர்லாந்தைச் சேர்ந்த [[நடிகை]] ஆவார். [[தி பிளிட்ஸ்|தி பிளிட்ஸ்சில்]] இருந்து தப்பிப்பதற்காக தனது தாய் மற்றும் இரு இளைய சகோதரர்களுடன் [[1940]] ஆம் ஆண்டில் [[அமெரிக்க ஐக்கிய நாடு]] சென்றார். பின் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] நடிப்பு பயின்றார். [[1942]] ஆம் ஆண்டில் எம் ஜி எம் எனப்படும் மெட்ரோ- கோல்ட்வின்- மேயர் நிறுவனத்தின் கீழ் நடிப்பதாக ஒப்பந்தம் ஆனார். இவரின் முதல் திரைப்படம் [[1944]] ஆம் ஆண்டில் வெளியான கேஸ்லைட் ஆகு. பின் [[1945]] இல் தெ பிக்சர் ஆஃப் தெ தோரியன் கிரே திரைப்படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களுக்காகவும் [[அகாதமி விருது]] மற்றும் [[கோல்டன் குளோப் விருது]] ஆகிய விருதுகளுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. எம் ஜி எம் நிறுவனத் தயாரிப்பில் பதினொரு திரைப்படங்களில் இவர் நடித்தார். இதில் பெரும்பான்மையனவை துணைக் கதாப்பாத்திரங்கள் ஆகும். இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் 1952 ஆம் ஆண்டில் முடிவுற்றது. [[1950கள்|1950களில்]] குறைந்தபட்ச நிதியில் தயாராகும் திரைப்படங்களின் (பி லிஸ்ட்) நட்சத்திர நாயகியாக இவர் விளங்கினார். [[1962]] இல் தெ மஞ்சூரியன் கேண்டிடேட் எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது.
 
ஏஞ்சலாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இவர் [[கலிபோர்னியா|கலிபோர்னியாவில்]] இருந்து [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] உள்ள கவுண்டி கார்க்க்கிற்கு [[1970]] ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தார். அதன் பின்பும் இவர் [[நாடகத் திரைப்படம்]] மற்றும் [[திரைப்படம்]] போன்றவற்றில் தொடர்ந்து நடித்தார். ஜிப்சி,சுவீனி டோட் மற்றும் தெ கிங் அன்ட் ஐ ஆகியவற்றில்முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் [[வால்ட் டிஸ்னி நிறுவனம்|வால்ட் டிஸ்னி நிறுவனத்தின்]] பெட்னாப்ஸ் அண்ட் புரூம்ஸ்டிக்ஸ் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்ப்பட்திரத்தில் நடித்தார். [[1971]] ஆம் ஆண்டில் வெளியான இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றது. இதன் பின்பும் [[தொலைக்காட்சி நாடகத் தொடர்|தொலைக்காட்சி நாடகத் தொடர்களில்]] நடித்தார். [[புதினம் (இலக்கியம்)|புதின]] [[எழுத்தாளர்|எழுத்தாளராக]] சர்வதேச அளவில் புகழ்பெற்றார். இவரும் ஜெஸ்ஸிகா பிளெட்சர் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரிந்த மர்டர் ஷீ ரோட் எனும் [[தொலைக்காட்சி நாடகத் தொடர்|தொலைக்காட்சி நாடகத் தொடரானது]] [[1984]] முதல் [[1996]] ஆண்டு வரையில் 12 பருவங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவரை வெளியான தொலைக்காட்சி நாடகத் தொடர் வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஒளிபரப்பான குற்ற நாடகத் தொடர் எனும் சாதனை படைத்தது. [[1991]] ஆம் ஆண்டு [[வால்ட் டிஸ்னி நிறுவனம்|வால்ட் டிஸ்னி நிறுவனத்தின்]] தயாரிப்பில் வெளியான பியூட்டி அண்ட் பீஸ்ட் எனும் [[இயங்குபடம்|இயங்குபடத்தில்]] பின்னணிக் குரல் கொடுத்தார்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏஞ்சலா_லேன்சுபரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது