"ஈத்தேன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,465 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஈத்தேன் நிறமற்று மணமற்று காணப்படுகிறது. இதனுடைய கொதிநிலை −88.5 °செல்சியசு வெப்பநிலை ஆகும். உருகுநிலை −182.8° செல்சியசு வெப்பநிலை ஆகும். திண்ம நிலை ஈத்தேன் பல்வேறு மாறுபாடுகளுடன் காணப்படுகிறது<ref name="Nes">{{cite journal |doi= 10.1107/S0567740878007037 |title= Single-crystal structures and electron density distributions of ethane, ethylene and acetylene. I. Single-crystal X-ray structure determinations of two modifications of ethane |journal= Acta Crystallographica Section B |volume=34 |issue=6 |page= 1947 |year= 1978 |last1= Van Nes |first1= G.J.H. |last2= Vos |first2= A. |url= http://www.rug.nl/research/portal/files/3440910/c3.pdf}}</ref>. சாதாரண அழுத்தத்தில் குளிரூட்டும்போது முதலாவது மாறுபாடு நெகிழிப் படிகமாக கனசதுரத் திட்டத்தில் படிகமாகி தோன்றுகிறது. இவ்வடிவில் ஐதரசனின் இருப்பிடங்கள் நிலையானதல்ல. நீண்ட அச்சில் அவை சுதந்திரமாக சுழல்கின்றன. ஈத்தேன் தண்ணீரில் மிகச் சிறிதளவே கரைகின்றன.
 
== வேதியியல் ==
ஈத்தேன் இரண்டு மெத்தில் குழுக்களால் ஆனது ஆகும். அதாவது, மெத்தில் குழுக்களின் இருபடியே ஈத்தேன் ஆகும். ஆய்வகத்தில் ஈத்தேன் கோல்ப் தொகுப்பு வினையினால் தயாரிக்கப்படுகிறது. இந்த நுட்ப வினையில் அசிட்டேட்டு உப்பின் நீரிய கரைசல் மின்னாற்பகுப்பு செய்யப்படுகிறது. எதிர்மின் முனையில் அசிட்டேட்டு ஆக்சிசனேற்றமடைந்து கார்பன் டை ஆக்சைடும் மெத்தில் இயங்குறுப்புகளும் உருவாகின்றன. மேலும் அதிகமான வினைத்திறன் கொண்ட இயங்குறுப்புகள் இணைந்து ஈத்தேன் உருவாகிறது.
: [[acetate|CH<sub>3</sub>COO<sup>−</sup>]] → CH<sub>3</sub>• + [[carbon dioxide|CO<sub>2</sub>]] + [[electron|e<sup>−</sup>]]
: CH<sub>3</sub>• + •CH<sub>3</sub> → C<sub>2</sub>H<sub>6</sub>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2517116" இருந்து மீள்விக்கப்பட்டது