பீனால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
 
பீனால் ஒரு கரிமச் சேர்மமாகும். இது தண்ணிரீல் நன்கு கரையும். 1000 மி.லி தண்ணிருக்கு 84.2 கிராம் பீனால் கரையும். பீனால் தண்ணீரின் ஒரேவிதமான கலவை நிறை விகிதம் ~2.6 மற்றும் அதைவிட அதிகமும் சாத்தியமாகும். பீனாலின் சோடியம் உப்பான சோடியம் பீனாக்சைடு மேலும் அதிகமாக நீரில் கரைகிறது.
 
== அமிலத்தன்மை ==
 
பீனாலின் அமிலத்தன்மை வலிமை குறைந்ததாகும். உயர் pH நிலைகளில் பீனாலேட்டு எதிர்மின் அயனியை C6H5O− அளிக்கிறது. இது பீனாக்சைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
 
PhOH ⇌ PhO− + H+ (K = 10−10)
 
அலிபாட்டிக் ஆல்ககால்களுடன் ஒப்பிடும் போது அவற்றைக் காட்டிலும் பீனால் 1 மில்லியன் முறை அதிகமாக அமிலத்தன்மையைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இது வலிமை குறைந்த அமிலமாகவே கருதப்படுகிறது. நீரிய NaOH உடன் பீனால் முழுமையாக வினைபுரிந்து H+ அயனியை இழக்கிறது. கரைசலின் வழியே கார்பனீராக்சைடு செலுத்தப்படுமாயின் பீனால் மீண்டும் கிடைக்கிறது. இவ்வினை பீனாலுக்கு அமிலத்தன்மை உள்ளதைக் காட்டுகிறது. ஆனால் பெரும்பாலான ஆல்ககால்கள் பகுதியாக மட்டுமே வினைபுரிகின்றன.
 
பீனாக்சைடு எதிர்மின் அயனியின் எதிர்மின் சுமை அரோமாட்டிக் வளையத்தில் பை ஆர்பிட்டல்களோடு உள்ளடங்காமை கொள்வதால் பீனாக்சைடு எதிர்மின் அயனி நிலைப்படுத்தப்படுகிறது. இதனால் ஆல்ககால்களைவிட பீனால்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவையாக உள்ளன என்று ஒரு காரணம் கூறப்படுகிறது <ref>''Organic Chemistry'' 2nd Ed. John McMurry {{ISBN|0-534-07968-7}}</ref>.
 
 
[[பகுப்பு:பீனால்கள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/பீனால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது