"அமைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,927 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
அமீன்களுடன் ஒப்பிடுகையில் அமைடுகள் மிகவும் வலிமை குறைந்த காரங்களாகும். ஓர் அமீனுடைய இணை அமிலம் 9.5 என்ற pKa மதிப்பைப் பெற்றுள்ளது. ஆனால் ஓர் அமைடினுடைய இணை அமிலம் −0.5 pKa மதிப்பைப் பெற்றுள்ளது. ஆகையால் அமைடுகள் தண்ணீரில் தெளிவாக குறிப்பிடத்தக்க அளவில் அமில-காரப் பண்புகளுடன் இல்லை எனலாம். இந்தக் காரக் குறைவுத் தன்மை கார்பனைல் குழுவின் எலக்ட்ரானைத் திரும்பப்பெறும் தன்மையால் விவரிக்கப்படுகிறது. இங்கு நைட்ரசன் மேலுள்ள தனி இணை எலக்ட்ரான்கள் ஒத்திசைவால் உள்ளடங்காத் தன்மையைப் பெறுகின்றன. மறுபுறம் கார்பாக்சிலிக் அமிலங்கள், எசுத்தர்கள், ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களைக் காட்டிலும் அமைடுகல் வலிமையான காரங்களாக உள்ளன. அவற்றின் இணை அமிலங்களின் pKa மதிப்புகள் −6 மற்றும் −10 ஆக உள்ளன.
 
ஆக்சிசனின் எலக்ட்ரான் கவர் தன்மை அதிகம் என்பதால் கார்பனைல் (C=O) பிணைப்பின் இருமுனைவுத் தன்மை N–C பிணைப்பின் இரு முனைவுத்தன்மையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. (C=O) பிணைப்பின் இருமுனைவுத் தன்மை இருப்பதால் அமைடுகள் ஐதரசன் பிணைப்பு ஏற்பிகளாகச் செயல்படுகின்றன. முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அமைடுகளில் N–H பிணைப்பு இரு முனைவுத்தன்மை இருப்பதால் அவ்வமைடுகள் ஐதரசன் பிணைப்பு கொடையாளிகளாகத் திகழ்கின்றன. இதனால் நீர் மற்றும் பிற மூலோபாய கரைப்பான்களுடன் அமைடுகள் ஐதரசன் பிணைப்பில் ஈடுபட இயலும். ஆக்சிசன் அணுவானது ஐதரசன் பிணைப்பை தண்ணீரிலிருந்து ஏற்றுக்கொள்ள முடியும், மேலும் N-H பிணைப்பு ஐதரசன் பிணைப்பை கொடையாக அளிக்க முடியும். இதுபோன்ற தொடர்புகளின் விளைவாக ஐதரோகார்பன்களை விட அமைடுகள் தண்ணீரில் அதிகமாக கரைகின்றன,
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2517638" இருந்து மீள்விக்கப்பட்டது