உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Steinsplitter பக்கம் பயனர் பேச்சு:Jayabharat-ஐ பயனர் பேச்சு:Deadratக்கு நகர்த்தினார்: Automatically moved page while renaming the user "[[Special:CentralA...
அடையாளம்: MassMessage delivery
வரிசை 30:
:வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
: [[விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி]] என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --[[பயனர்:NeechalBOT|NeechalBOT]] ([[பயனர் பேச்சு:NeechalBOT|பேச்சு]]) 07:53, 27 அக்டோபர் 2013 (UTC)

== வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள் ==

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. '''2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.''' இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், '''நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும்'''. எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா [[stats:EN/TablesWikipediaEN.htm|2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக்]] கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று '''அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.'''

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள '''[[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி|இங்கு]]''' வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் [[விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி|போட்டியின் பேச்சுப் பக்கத்தில்]] தயங்காது கேளுங்கள்.

நன்றி.

— ''[[பயனர்:Ravidreams|இரவி]]'' 11:59, 1 மே 2018 (UTC)

"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Deadrat" இலிருந்து மீள்விக்கப்பட்டது