கிடை வரிசை (தனிம அட்டவணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களை அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையில் அமைத்தால் ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் சீரான் இடைவெளிக்குப் பின் அமைகின்றன. தற்கால குவாண்டம் இயங்கியல் கோட்பாடுகளின்படி ஒரு தொடரில் அணு எண் உயர்வதற்கு ஏற்ப அவற்றின் ஆற்றல் கூடுகள் எலக்ட்ரான்களால் ஒரு மந்தவாயு அமைப்பு வரும்வரை முறையாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு எலக்ட்ரான் கூடும் பூர்த்தி செய்யப்பட்டுக் கொண்டே வருவதை அட்டவணையில் உள்ள தொடர்கள் காட்டுகின்றன.
 
[[File:Klechkovski rule.svg|thumb|upright=1.5|மாடலங் விதியின்படி அதிகரிக்கும் ஆற்றலின் அடிப்படையில் ஆர்பிட்டால்கள் எந்தவரிசையில் நிரம்பவேண்டும் என்பதை விளக்குகிறது. ஒவ்வொரு மூலைவிட்ட சிவப்பு அம்புக்குறியும் வேறுபட்ட மதிப்பை குறிக்கிறது. {{nowrap|''n + ℓ''.}}]]
[[File:Madelung rule.svg|thumb|right|350px|[[Aufbau principle#The Madelung energy ordering rule|மேடலங்கின் ஆற்றல் நிரம்பும் விதி: அதிகரிக்கும் எலக்ட்ரான்கள் அவற்றுக்குரிய எலக்ட்ரான் கூடுகளில் எந்த வரிசை முறையில் நிரம்புகின்றன என்பதை விவரிக்கிறது. ஒவ்வோர் மூலைவிட்டமும் n + l மதிப்புடன் வேறுபடுகின்றன]]
 
தனிம வரிசை அட்டவணையில் அமைந்துள்ள எசு தொகுதி மற்றும் பி தொகுதி தனிமங்கள் ஒரே தொடருக்குள் இருக்கும் போது பொதுவாக ஆவர்த்தன போக்கையும் பண்புகளில் ஒற்றுமையையும் காட்டுவதில்லை. மேலிருந்து கிழாகச் செல்லும் தொகுதிகளில் உள்ள தனிமங்கள் இப்பண்புகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் டி தொகுதி தனிமங்கள் தொடர்களில் இந்த பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அதேபோல எப் பிரிவு தனிமங்கள் தொடர்களில் அதிக அளவு ஒற்றுமையை காட்டுகின்றன.
வரிசை 25:
முதல் தொடர் மிகவும் குறுகிய தொடர் ஆகும். இதில் ஐதரசன் ஈலியம் என்ற இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளன. எனவே இங்கு எண்ம விதி பின்பற்றப்படவில்லை. ஈலியம் மந்த வாயுவாக செயல்படுகிறது. எனவே இது 18 ஆவது தொகுதியின் உறுப்பினராகக் கருதப்படுகிறது. அணுக்கட்டமைப்பைப் பொறுத்தவரையில் இவை எசு தொகுதி தனிமங்கள் ஆகும். எனவே சில சன்மயங்களில் ஈலியத்தை 2 ஆவது தொகுதி தனிமம் என்பர். அல்லது 2,18 ஆவது தொகுதி தனிமம் என்பர். ஐதரசன் ஒரு எலக்ட்ரானை இழக்கவும் பெறவும் செய்கிறது என்பதால் அதை 1 மற்றும் 17 ஆவது தொகுதி தனிமம் என்பர்.
 
*ஐதரசன் (H) என்பது வேதியியல் தனிமங்களில் அதிகமாகக் காணப்படும் தனிமம் ஆகும். மிகவும் இலேசான தனிமம் ஆகும். இது பிரபஞ்சத்தின் அடிப்படை தனிமங்களில் 75% ஆகும் <ref>{{cite web | last=Palmer | first=David | date=November 13, 1997 | url=http://imagine.gsfc.nasa.gov/docs/ask_astro/answers/971113i.html | title=Hydrogen in the Universe | publisher=NASA | accessdate=2008-02-05}}</ref>. தனிமநிலை ஐதரசன் ஒப்பீட்டளவில் அரிதானது ஆகும். மீத்தேன் போன்ற ஐதரோ கார்பன்களில் இருந்து தொழிற்துறையில் இது தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான தனிமங்களுடன் சேர்ந்து சேர்மங்களை உருவாக்கும். நீர் மற்றும் கரிமச் சேர்மங்களில் அதிக அளவில் உள்ளது <ref>{{cite encyclopedia |encyclopedia=[[Encyclopædia Britannica]] |year=2008 |title=hydrogen}}</ref>
*[[ஈலியம்]] (He) ஒரு வாயுவாக உள்ளது..<ref>{{cite web |accessdate=2008-07-15 |url=http://www.webelements.com/helium/physics.html |title=Helium: physical properties |publisher=WebElements}}</ref> இரண்டாவது அதிக அளவில் கிடைக்கும் தனிமம் ஈலியம் ஆகும்.<ref>{{cite web |accessdate=2008-07-15 |url=http://www.webelements.com/helium/geology.html |title=Helium: geological information |publisher=WebElements}}</ref> பெரு வெடிப்பில் உருவானது. விண்மீன்களில் அணுக்கரு இணைவு மூலம் புதிய ஈலியம் தோன்றுகிறது..<ref>{{cite web |accessdate=2008-07-15 |url=https://www.newscientist.com/article/mg12517027.000-origin-of-the-chemical-elements.html |title=Origin of the chemical elements |work=New Scientist |date=1990-02-03 |author=Cox, Tony}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கிடை_வரிசை_(தனிம_அட்டவணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது