அன்னா லெத்திசியா பார்பௌல்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
வரிசை 6:
பார்பௌல்டு [[நெப்போலியப் போர்கள்|நெப்போலியப் போர்களில்]] பிரித்தானியாவின் பங்கேற்பை விமரிசித்து ''எய்ட்டீன் அன்ட்ரெட் இலெவன்'' (1811) என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்; இதற்கு எழுந்த தீய விமரிசனங்களால் மனமுடைந்து அதற்குப் பின் தம் வாழ்க்கையில் எதையுமே வெளியிடவில்லை.<ref>Anna Letitia Barbauld, ''Anna Letitia Barbauld: Selected Poetry and Prose'', eds. William McCarthy and Elizabeth Kraft. Peterborough: Broadview Press Ltd. (2002), p. 160.</ref> [[பிரெஞ்சுப் புரட்சி]]யின் துவக்க காலங்களில் அவர் ஊக்கமூட்டிய புனைவிய கவிஞர்கள் பலரும் பிற்கால பழமை விரும்பிகளாக அவருக்கு எதிராக எழுதியதும் அவருக்கு அதிர்ச்சியளித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பார்பௌல்டு சிறுவர்களுக்கான கல்விசார் எழுத்தாளராக மட்டுமே அறியப்பட்டார்; இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலும் மறக்கப்பட்டார். 1980களில் [[பெண்ணியத் திறனாய்வு|பெண்ணியத் திறனாய்வின்]] எழுச்சியின் பின்னர் அவரது படைப்புக்களில் புதிய ஆர்வம் எழுந்தது. [[இலக்கிய வரலாறு|இலக்கிய வரலாற்றில்]] அவருக்கான சிறப்பிடம் மீட்கப்பட்டது.<ref>William McCarthy, "A 'High-Minded Christian Lady': The Posthumous Reception of Anna Letitia Barbauld." ''Romanticism and Women Poets: Opening the Doors of Reception'', eds. Harriet Kramer Linkin and Stephen C. Behrendt. Lexington: University Press of Kentucky, (1999).</ref>
==மூலங்கள்==
தற்போது அறியப்பட்டுள்ள பார்பௌல்டின் வாழ்க்கைப் பற்றி பெரும்பாலும் இரண்டு வாழ்க்கை நினைவுக் குறிப்புகளிலிருந்தே கிடைக்கிறது. முதலாவது 1825இல் அவரது உடன்பிறப்பின் மகள் ''லூசி அய்க்கின்'' எழுதியது; இரண்டாவது 1874இல் அவரது உடன்பிறந்தாரது பேத்தி ''அன்னா லெத்திசியா லெ பிரெடன்'' எழுதியது. பார்பௌல்டு சிலருக்கு எழுதிய கடிதங்களும் மீட்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவர் வீட்டு ஆவணங்கள் பலவும் 1940இல் [[தி பிளிட்ஸ்|இரண்டாம் உலகப் போரில் நாசி ஜெர்மனியின் விமானப்படை பிரிட்டன் மீது நடத்திய தொடர் குண்டுவீச்சில் ]] தீக்கிரையாயின.<ref>McCarthy, ''Voice of the Enlightenment'', p. xvi.</ref>

==மேற்சான்றுகள்==
{{Reflist|2}}
[[பகுப்பு:1743 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அன்னா_லெத்திசியா_பார்பௌல்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது