அலன் போடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தொழில் வாழ்க்கை
வரிசை 1:
'''அலன் போடர் (Allan Robert Border''' பிறப்பு: [[சூலை 27]], [[1955]]) என்பவர் முன்னாள் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி]] வீரர் ஆவார். பல துடுப்பாட்டப் போட்டிகளுக்கு ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] இருந்தார். இவர் ஏ. பி எனும் [[புனைபெயர்|புனைபெயரால்]] அழைக்கப்படுகிறார். இவர் மொத்தம் 156 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டங்களில்]] விளையாடி சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை இவரின் அணியைச் சார்ந்த [[ஸ்டீவ் வா]] முறியடித்தார்.<ref>{{cite Web|url=http://stats.espncricinfo.com/wi/content/records/283746.html|title=RECORDS / TEST MATCHES / INDIVIDUAL RECORDS (CAPTAINS, PLAYERS, UMPIRES) / MOST MATCHES AS CAPTAIN|access-date=10 December 2017}}</ref>
 
இவர் இடது கை மட்டையாளராகவும் அவ்வப்போது இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டார். [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் 11, 174 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். பின் இந்தச் சாதனையானது [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின்]] [[பிறயன் லாறா]] [[2005]] ஆம் ஆம் ஆண்டில் முறியடித்தார்.இவர் தேர்வுத் துடுப்பாட்டங்களில் 27 [[நூறு (துடுப்பாட்டம்)]] அடித்தார். ஓய்வு பெறும் தருணத்தில் [[தேர்வுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில்]] அதிக ஓட்டங்கள் எடுத்த ஆத்திரேலிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் இந்தச் சாதனை15 ஆண்டு காலங்கள் முறியடிக்கப் படாது இருந்தது. பின் [[சூலை]], [[2009]] இல் [[ஆஷஸ்]] தொடரில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக விளையாடிய போது [[ரிக்கி பாண்டிங்]] இந்தச் சாதனையை முறியடித்தார்.<ref>{{cite web|url=http://www.thesportscampus.com/200907311535/news-bytes/ponting-overtakes-border|title=Ponting passes Border as highest Australian run getter}}{{dead link|date=January 2014}}</ref>
 
[[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] இவரை ''ஹால் ஆஃப் ஃபேமாக'' அறிவித்தது.<ref>{{cite web|url=http://www.thesportscampus.com/200907161402/test-cricket/hof-inductees|title=Border, Harvey, Gower, Underwood inducted into Hall of Fame}}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
அலன் போடர் [[சூலை 27]], [[1955]] இல் [[சிட்னி]], [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்ஸ்சில்]] பிறந்தார். இவரின் [[தந்தை]] ஜான் , நியூ சவுத் வேல்சில் உள்ள கிராமத்தைச் சார்ந்தவர், [[தாய்]] ஷீலா கடையின் உரிமையாளர் ஆவார்.<ref>Christison, p. 8.</ref> இவர்களுக்கு நான்கு [[குழந்தைகள்]] உள்ளனர். இவர் ''நார்த் சிட்னி ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில்'' பயின்றார். தனது பள்ளிப் படிப்பை [[1972]] ஆம் ஆண்டில் நிறைவு செய்தார்.<ref>Christison, p. 9.</ref><ref name="Wisden">{{cite web|url=http://content-aus.cricinfo.com/ci/content/story/154472.html|title='&#39;Wisden, 1982 edition'&#39;: Allan Border — Cricketer of the year|publisher=Content-aus.cricinfo.com|date=|accessdate=2013-08-16}}</ref>
 
== தொழில் வாழ்க்கை ==
[[1975]] முதல் [[1976]] ஆம் ஆண்டுகளில் இவர் விளையாடிய [[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல் தரத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் 600 ஓட்டங்களுக்கும் மேலாக எடுத்தார். அதன் பின்பான ஆண்டுகளில் தொடர்ச்சியாக இருமுறை நூறு ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் [[நியூ சவுத்து வேல்சு புளூசு]] அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.<ref>Christison, p. 13–14.</ref> [[சனவரி]], [[1977]] ஆம் ஆண்டில் [[குயின்ஸ்லாந்து]] அணிக்கு எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 36 ஓட்டங்கள் எடுத்தார்.<ref name=":0">Christison, p. 14–15.</ref> <ref name="c14">Christison, p. 14.</ref>மேலும் எதிரணியின் இறுதி மூன்று இலக்குகளை ''கேட்ச்'' பிடித்து வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்<ref name=":0" />. [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக]] துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 159 ஓட்டங்கள் எடுத்து வீழாமலிருந்தார். ''செஃபீல்டு சீசன்'' போட்டித் தொடரில் 617 ஓட்டங்கள் எடுத்தார். இதில் இவரின் சராசரி 36.29 ஆகும்.<ref name=":0" /> பின் இங்கிலாந்து சென்று ''ஈஸ்ட் லங்கஷயர்'' துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடி 1191 ஓட்டங்களை 56.71 சராசரியிலும், 54 இலக்குகளையும் வீழ்த்தினார். இவரின் பந்து வீச்சு சராசரி 18.60 ஆகும்.<ref name="Wisden2">{{cite web|url=http://content-aus.cricinfo.com/ci/content/story/154472.html|title='&#39;Wisden, 1982 edition'&#39;: Allan Border — Cricketer of the year|publisher=Content-aus.cricinfo.com|date=|accessdate=2013-08-16}}</ref><ref>Christison, p. 16.</ref>
 
 
==புள்ளிவிவரங்கள்==
*ரெஸ்ற்கள் - 156
*ஓட்டங்கள் - 11174
*சராசரி - 50.56
*சதங்கள் - 27
*50கள் - 63
*கூடிய ஓட்டங்கள் - 205
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.cricinfo.com/db/PLAYERS/AUS/B/BORDER_AR_02001572/ கிறிகின்ஃபோ தளத்தில் அலன் போடர் பற்றிய பக்கம்]
 
* [http://www.cricinfo.com/db/PLAYERS/AUS/B/BORDER_AR_02001572/ கிறிகின்ஃபோ தளத்தில் அலன் போடர் பற்றிய பக்கம்]
{{விளையாட்டுவீரர்-குறுங்கட்டுரை}}
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்]]
[[பகுப்பு:1955 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அலன்_போடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது