கூட்டுச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
'''கூட்டுச்சர்க்கரை''' (''Polysaccharide'') அல்லது '''பல்சர்க்கரைடு''' என்பவை பல [[ஒற்றைச்சர்க்கரை]]களின் கூட்டிணைப்பால் ஆனவை. இயற்கையில் பல கூட்டுச்சர்க்கரைகள் அதிக அளவில் தோன்றுகின்றன. இவை [[பலபடி]] [[கார்போவைதரேட்டு|கார்போவைதரேட்டுகள்]] ஆகும். இவற்றை [[நீராற்பகுத்தல்|நீராற்பகுக்கும் போது]] ஒற்றைச்சர்க்கரைகள் அல்லது கூட்டுச்சர்க்கரைகளைத் தருகின்றன. வடிவத்தில் இவை நேர்கோட்டு வடிவம் தொடங்கி பல கிளைகளைக் கொண்ட சிக்கலான அமைப்பு வரை பலவிதமான அமைப்புகளைப் பெற்றுள்ளன. இவற்றில் பல [[உடல்]] கட்டுமான பொருட்களாகிய [[கைட்டின்]], [[செல்லுலோஸ்|செல்லுலோசு]] எனும் பொருட்களாகவும், அதிக அளவிலான சக்தியை சேமிப்பு உணவாக [[மாப்பொருள்]], மற்றும் [[கிளைக்கோசன்|கிளைக்கோசன்]] போன்றவற்றையும் சொல்லலாம். [[உணவு|உணவுத்]] துகள்களில் மாப்பொருளானது பெக்டின், அமைலோபெக்டின் மூலக்கூறுகளாக உள்ளது. [[விலங்கு|விலங்குகளின்]] [[கல்லீரல்|கல்லீரலிலும்]] [[தசை|தசைகளிலும்]] [[கிளைக்கோசன்]] எனும் கூட்டுச்சர்க்கரை சேமிப்புணவாக அமைந்துள்ளது. பாலிசாக்கரைடுகள் பெரும்பாலும் பலபடித்தானவையாகவும், மீண்டும் மீண்டும் வரும் அலகில் சிறிய மாற்றங்களைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. கட்டமைப்பைப் பொறுத்து, இந்த பெருமூலக்கூறுகள் தாங்கள் கட்டமைக்கப்பட்டுள்ள ஒற்றைச்சர்க்கரைடுகளின் பண்புகளிலிருந்து வேறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கலாம். அவைகள் படிக வடிவமற்றவையாகவும், நீரில் கரையாத தன்மையைப் பெற்றவையாகவும் இருக்கலாம்.<ref name=Varki_2008>{{cite book |vauthors=Varki A, Cummings R, Esko J, Freeze H, Stanley P, Bertozzi C, Hart G, Etzler M | work=Cold Spring Har J |author4=Jessica Freeze |author5=Hart G |author6=Marth J | title=Essentials of glycobiology | publisher=Cold Spring Harbor Laboratory Press | year=1999 | isbn=0-87969-560-9 |url=https://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=glyco.TOC&depth=2 }}</ref>
 
பாலிசாக்கரைடுகளில் உள்ள அனைத்து ஒற்றைசர்க்கரைகளும் ஒரே வகையாகும் போது, பாலிசாக்கரைடு ஓரினபல்சக்கரைட்டு அல்லது ''ஓரினகிளைக்கான்'' என அழைக்கப்படுகிறது, ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட ஒற்றைசர்க்கரைகள் இருந்தால் அவை '' பல்லினபல்சக்கரைட்டு '' அல்லது ''பல்லினகிளைக்கான்'' எனவும் அழைக்கப்படுகிறது..<ref>{{GoldBookRef|title=homopolysaccharide (homoglycan)|url=http://goldbook.iupac.org/H02856.html}}</ref><ref>{{GoldBookRef|title=heteropolysaccharide (heteroglycan)|url=http://goldbook.iupac.org/H02812.html}}</ref> இயற்கை சர்க்கரைடுகள், பெரும்பாலும், (CH<sub>2</sub>O)<sub>''n''</sub> (''n'' <math>\geq</math> 3) என்ற பொதுவான வாய்ப்பாட்டைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரைகள் என்றழைக்கப்படும் எளிய கார்போவைதரேட்டுகளாக அமைகின்றன.
 
கூட்டுச்சர்க்கரைகளின் பொதுச்சூத்திரம் C<sub>x</sub>(H<sub>2</sub>O)<sub>y</sub> ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுச்சர்க்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது