கூட்டுச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 6:
 
பல்சர்க்கரைடுகள் என்பவை பத்துக்கும் மேற்பட்ட ஒற்றைச்சர்க்கரை அலகுகளையும், ஓலிகோசர்க்கரைடுகள் என்பவை மூன்று முதல் பத்து வரையிலான ஒற்றைச்சர்க்கரைடுகளையும் கொண்டதாக இருக்கும். பல்சர்க்கரைடுகள் ஒரு முக்கிய வகை [[உயிரிப்பலபடி|உயிரிப்பலபடிகளாகும்]]. அவை உயிரிகளில் கட்டமைப்பு அல்லது சேமிப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்றன. குளுக்கோசின் பலபடியான [[மாப்பொருள்]] ஒரு சேமிப்பு பல்சர்க்கரைடாகத் தாவரங்களில் பயன்படுகிறது. இது அமைலோசு மற்றும் பக்கச்சங்கிலிகளுடனான [[அமைலோபெக்டின்]] ஆகிய இரண்டு வகையிலும் காணப்படுகிறது. விலங்குகளில், அமைப்புரீதியாக ஒத்த குளுக்கோசின் பலபடியானது அதிக அடர்த்தியாக பக்கச்சங்கிலிகளைக் கொண்ட [[கிளைக்கோசன்|கிளைக்கோசன்களாக]] காணப்படுகிறது. சில நேரங்களில், "விலங்கு மாப்பொருள்" எனவும் அழைக்கப்படுகிறது. கிளைக்கோசனின் பண்புகள் அதனை மிக விரைவாக வளர்சிதைமாற்றத்திற்கு அனுமதிப்பதால், இது இயங்கும் விலங்குகளின் செயல்மிகு வாழ்க்கைக்கு உகந்ததாக உள்ளது. [[செல்லுலோசு]] மற்றும் [[கைட்டின்]] கட்டமைப்பு பல்சர்க்கரைடுகளுக்கான உதாரணங்களாக உள்ளன. செல்லுலோசானது தாவரங்கள் மற்றும் இதர உயிரினங்களில் செல் சுவர்களில் பயன்பகின்றன. மேலும், பூமியில் மிக அதிகமாகக் கிடைக்கும் கரிம மூலக்கூறாகவும் செல்லுலோசு அறியப்படுகிறது. <ref>N.A.Campbell (1996) ''Biology'' (4th edition). Benjamin Cummings NY. p.23 {{ISBN|0-8053-1957-3}}</ref> செல்லுலோசானது, காகிதம் மற்றும் துணித் தொழிற்சாலைகளில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினைக் கொண்டுள்ளது. மேலும், ரேயான், செல்லுலோசு அசிட்டேட்டு, செல்லுலாய்டு மற்றும் நைட்ரோசெல்லுலோசு ஆகியவை தயாரிப்பதற்கான தொடக்க நிலை மூலப்பொருளாகப் பயன்படுகிறது.
 
கைட்டினானது ஒத்த அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், நைட்ரசனைக் கொண்ட பக்கத்தொடர்களைக் கொண்டுள்ளதால் இதன் வலிமை அதிகமாகிறது. இது கணுக்காலிகளின் வெளிப்புறக்கூட்டிலும், சில பூஞ்சை வகைகளின் செல் சுவரிலும் காணப்படுகிறது. இதுவும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் நூலிழைகள் தயாரிப்பு உள்ளிட்ட பலவிதமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுச்சர்க்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது