முரளி விஜய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பகால வாழ்க்கை
No edit summary
வரிசை 108:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
முரளி விஜய் தனது 17ஆவது வயதில் இருந்து துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.<ref>{{cite web|title=Murali Vijay|url=https://cricket.yahoo.com/player-profile/Murali-Vijay_4531|publisher=Yahoo Cricket|accessdate=17 December 2014}}</ref> [[2003]] ஆம் ஆண்டில் சென்னை, [[ஆழ்வார் பேட்டை]] துடுப்பாட்ட சங்க அணிக்காக விளையாடினார். பின் [[சீ. கே. நாயுடு]] கோப்பைக்கான போட்டித் தொடரில் தமிழ்நாடு 22 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். அந்தத் தொடரில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. ஆனால் முரளி விஜய் சரியான ஆட்டத் திறனை இதில் வெளிப்படுத்தத் தவறினார். அவர் விளையாடிய 6 போட்டிகளிலும் சராசரியாக 26.45 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார்.<ref>{{cite web|title=Batting and Fielding for Tamil Nadu Under-22s in CK Nayudu Trophy 2004/05|url=https://cricketarchive.com/Archive/Events/7/CK_Nayudu_Trophy_2004-05/Tamil_Nadu_Under-22s_Batting.html|publisher=CricketArchive|accessdate=17 December 2014}}</ref> அதன் பின்பும் சில துடுப்பாட்ட சங்கங்களின் சார்பாக விளையாடினார். [[2005]]-[[2006]] ஆம் ஆண்டிற்கான [[சீ. கே. நாயுடு]] கோப்பைக்கான போட்டித் தொடரில் தமிழ்நாடு 22 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் 26.50 சராசரி ஓட்டங்களைப் பெற்றார்.<ref>{{cite web|title=Batting and Fielding for Tamil Nadu Under-22s in CK Nayudu Trophy 2005/06|url=https://cricketarchive.com/Archive/Events/7/CK_Nayudu_Trophy_2005-06/Tamil_Nadu_Under-22s_Batting.html|publisher=CricketArchive|accessdate=17 December 2014}}</ref>
 
இந்தத் தொடரில் சரியான திறனை வெளிபடுத்தத் தவறினாலும் இவருக்கு [[பெப்ரவரி 2006]] ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் [[ரஞ்சிக் கோப்பை]] போட்டியில் தமிழ்நாடு அணியில் இடம் கிடைத்தது. [[பெப்ரவரி 16]] அன்று [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி 17 ஓட்டங்கள் எடுத்தார்.<ref>{{cite web|title=Karnataka v Tamil Nadu in 2005/06|url=https://cricketarchive.com/Archive/Scorecards/84/84958.html|publisher=CricketArchive|accessdate=17 December 2014}}</ref> பின் இரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் 38 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் 1 ஓட்டம் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி பெற்றது.<ref>{{cite web|title=Railways v Tamil Nadu in 2005/06|url=https://cricketarchive.com/Archive/Scorecards/86/86159.html|accessdate=17 December 2014}}</ref>
 
==தேர்வு ஆட்டங்களில்==
"https://ta.wikipedia.org/wiki/முரளி_விஜய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது