பூட்டானின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 6:
1616இல் மேற்கு திபெத்திலிருந்து வந்த ''லாமா'' சப்துருங் ரின்பொச்சே என அறியப்பட்ட [[சப்துருங் இங்கவனாக் நாம்கியால்]] மூன்றுமுறை திபெத்திய தாக்குதல்களை முறியடித்தார். சண்டையிட்டு வந்த பௌத்தப் பள்ளிகளை அடக்கி, டிசா யிக் எனப்படுகின்ற சிக்கலான, முழுமையான சட்ட நெறியை உருவாக்கி தம்மை அரசராக வரித்துக்கொண்ட இவரே பூட்டானின் ஒருங்கிணைப்பிற்கு வழிவகுத்தார்.
சமய நிர்வாகத்தையும் நாட்டு நிர்வாகத்தையும் இவரே தலைமையேற்று நடத்தினார். இவரது மறைவிற்குப் பின்னர் அடுத்த 200 ஆண்டுகளில் உட்பூசல்களாலும் உள்நாட்டுச் சண்டைகளாலும் சப்துருங்கின் அதிகாரம் குறைந்தது. 1885இல் உக்யென் வாங்ச்சுக் மீண்டும் அதிகாரத்தை மையப்படுத்தி துணைக்கண்டத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியர்களுடன்]] நெருங்கிய நட்புடன் இருந்தார்.<ref name=bn/>
==இருபதாம் நூற்றாண்டில்==
1907இல் உக்யென் வாங்ச்சுக் பூட்டானின் பாரம்பரிய அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திசம்பர் 17, 1907இல் முடிசூட்டிக் கொண்டார். நாட்டுத் தலைவராக [[டிரக் கியால்ப்போ]] (கடல்நாக அரசர்) என அழைக்கப்பட்டார். 1910இல் அரசர் யுக்யென் பிரித்தானியருடன் ''புனாக்கா உடன்படிக்கை'' என்ற உடன்பாடு கண்டார்; இதன்படி பிரித்தானிய இந்தியா பூட்டானின் உள்விவகாரங்களில் எவ்விதத் தலையீடும் செய்யாது என உறுதி செய்யப்பட்டது, ஆனால் பூட்டான் தனது வெளிவிவகாரங்களில் பிரித்தானியரின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும். 1926இல் யுக்யென் இறந்தபோது அவரது மகன் [[ஜிக்மே வாங்சுக்]] பதவியேற்றார். 1947இல் இந்தியா விடுதலையுற்றபின் புதிய இந்திய அரசும் பூட்டானை சுதந்திரமான நாடாக அங்கீகரித்தது. 1949இல் இந்தியாவுடன் பூட்டான் ''அமைதியும் நட்புறவும் உடன்படிக்கை''யை ஏற்படுத்திக் கொண்டது. புனாக்கா உடன்பாட்டைப் போலவே இதிலும் இந்தியா பூட்டானின் உள்விவகாரங்களில் தலையிடாதென்றும் ஆனால் அதன் வெளிநாட்டுக் கொள்கை இந்தியாவின் பரிந்துரைப்படி இருக்குமென்றும் ஏற்கப்பட்டது. 1952இல் அவரது மகன் ஜிக்மே டோர்ஜி வாங்ச்சுக் பதவியேற்றார். இவரது ஆட்சியில் பூட்டான் மெதுவாக தனது தனிமையிலிருந்து வெளிவந்து திட்டமிட்ட வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டது. பூட்டான் தேசிய சட்டமன்றம், பூட்டானிய அரசப் படை, அரச நீதிமன்றம் ஆகியன நிறுவப்பட்டன. புதிய சட்டமுறை செயலாக்கப்பட்டது. <ref name=bn/> 1971இல் பூட்டான் [[ஐக்கிய நாடுகள் அவை]]யில் உறுப்பினரானது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பூட்டானின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது