மரியாள் (இயேசுவின் தாய்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

116 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
== மரபு வணக்கம் ==
 
முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவர்கள் மரியாவை, 'ஆண்டவரின் தாய்'<ref>லூக்கா 1:43</ref> என்று அழைத்து பெருமைப்படுத்தினர். இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் தோன்றியதாக தெரிகிறது. கி.பி.150ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட 'யாக்கோபின் முதல் நற்செய்தி' என்ற நூல், கன்னி மரியாவின் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர் குறித்த தகவல்களை வழங்குகிறது. மரியாவை 'கடவுளின் தாய்' என்று அழைத்து, அவரது உதவியை வேண்டும் வழக்கம் மூன்றாம் நூற்றாண்டில் உருவானது.<ref>'''கன்னி மரியா''' நூல், டே. ஆக்னல் ஜோஸ், பக்.50</ref> இந்த பின்னணியில், [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவை இன்றளவும் அன்னை மரியாவுக்கு மேலான வணக்கம் செலுத்தி வருகின்றன. மரபின் அடிப்படையில், மரியன்னைக்கு பல்வேறு விழாக்களையும் இந்த கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
 
== இவற்றையும் பார்க்க ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2520899" இருந்து மீள்விக்கப்பட்டது