குன்லுன் மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Infobox mountain|name=குன்லுன் மலைத்தொடர்|other_name=崑崙山|native_name=Kūnlún Shān|photo=Cordillère_du_Kunlun.jpg|photo_caption= திபெத்-சிங்சியாங் நெடுஞ்சாலையிலிருந்து மேற்கு குன்லுன் சானின் தோற்றம்|range_coordinates={{coord|36|N|84|E|type:mountain_region:CN_scale:300000|format=dms|display=inline,title}}|highest=[[லியுசி சான்]] |elevation_m=7167|length_orientation=N/S|width_orientation=E/W|country=China|region=[[திபெத் தன்னாட்சி பகுதி]], [[கிங்ஹாய் மாகாணம்|கின்காய் மாகாணம்]], [[சிங்சியாங்சிஞ்சியாங்]]|border=[[கோபி பாலைவனம்]]|state_type=Region}}{{Infobox Chinese|pic=Kunlun (Chinese characters).svg|piccap="Kunlun" in Simplified (top) and Traditional (bottom) Chinese characters|t=崑崙山|p=Kūnlún Shān|s=昆仑山|order=st|w=K'un<sup>1</sup>-lun<sup>2</sup> Shan<sup>1</sup>|mi={{IPAc-cmn|k|un|1|.|l|un|2|-|sh|an|1}}|psp=Kwenlun Mountains}}'''குன்லுன் மலைத்தொடர்''' (The <span>Kunlun Mountains)</span> (simplified Chinese{{zh|t=崑崙山|s=昆仑山|p=Kūnlún Shān}}traditional Chinese{{zh|t=崑崙山|s=昆仑山|p=Kūnlún Shān}}, {{IPA-cmn|kʰu̯ə́nlu̯ə̌n ʂán|pron}}; {{Lang-mn|Хөндлөн Уулс}}, ''Khöndlön Uuls'') ஆசியாவிலுள்ள மிக நீண்ட மலைத்தொடர்களினல் ஒன்றாகும். இம்மலைத்தொடர் 3000 கிலோமீட்டர்களுக்கும் (1900 மைல்கள்) அதிகமான நீளமுடையது. விரிவான நோக்கில் பார்க்கும் போது, டாரிம் வடிநிலத்திற்குத் தெற்கில், திபெத்திய பீடபூமியின் வடக்கு எல்லை வரை நீண்டு விரிந்து கிடக்கிறது.
 
இம்மலைத்தொடர் குறித்த விளக்கம் வேறுபடுகிறது. ஒரு பழைய ஆதாரம்<ref>L. Richard, 'Comprehensive Geography of the Chinese Empire',1905</ref> குன்லுன் என்பது சீனாவின் மையப்பகுதியில் குறுக்காகச் செல்லும் மலைத்தொடர் என்கிறது. அதாவது, குன்லுன் என்பது, குறுகிய பொருளில்: அல்டைன் டாக், க்யீலியன் மலைத்தொடர் மற்றும் கின் மலைத்தொடர் ஆகிவை சேர்ந்த மலைத்தொடர் என்கிறது. ஒரு சமீபத்திய ஆதாரம்<ref>National Geographic Atlas of China,2008</ref> ஒன்று குன்லுன் தொடர் டாரிம் வடிநிலத்தின் பெரும்பான்மையான தெற்கு பக்கப்பரப்பையும் மற்றும் அல்டைன் டாக் மலைத்தொடரின் கிழதென் பகுதியைத் தொடர்வதாகவும் உள்ளதாகக் கூறுகிறது. [[சிமா சியான்]] (''[[மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள்|ஷிஜி]]'', சுருள் 123) கூற்றுப்படி, [[ஆனின் பேரரசர் வு|பேரரசர் வூ ஹான்]] மஞ்சள் ஆற்றின் மூலத்தைக் கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பியதாகவும், அவ்வாறு சென்ற போது இம்மலைத்தொடரின் மூலத்திற்கு குன்லுன் என்று பெயரிட்டதாகவும் தெரிகிறது. பாரம்பரிய நுாலான சாங்காய் ஜிங் படி இந்தப்பெயரானது புராணச்சார்புடைய அமைவிடம் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என அறியப்படுகிறது.
 
== பரப்பெல்லை ==
[[தஜிகிஸ்தான்|தஜிகிஸ்தானின்]], பாமிர் மலைகளிலிருந்து தொடங்கி இம்மலைத்தொடர் [[சிஞ்சியாங்]] மற்றும் [[கிங்ஹாய் மாகாணம்|கிங்காய் மாகாணத்தில்]] திபெத் தன்னாட்சிப் பகுதிகளில், சீன-திபெத்திய எல்லைகள் இடையிலான பகுதிகளில் நீண்டு கிடக்கிறது. <ref>{{Cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/325007/Kunlun-Mountains|title=Kunlun Mountains|publisher=[[Encyclopædia Britannica]]|accessdate=2009-11-19}}</ref> இதன் தெற்கு முனையில் தற்போது டாரிம் வடிநிலம் என்றழைக்கப்படும் பகுதியின் தெற்கு எல்லை, பிரபலமற்ற [[தக்கிலமாக்கான் பாலைவனம்]] அல்லது மணலில் புதைந்த வீடுகளின் பாலைவனம் மற்றும் மற்றும் [[கோபி பாலைவனம்]] வரை நீண்டு கிடக்கிறது. பல முக்கியமான ஆறுகளான, கோடான் சோலை மற்றும் தக்கிலமாக்கான் பாலைவனம் வழியாக பாய்ந்து செல்லும் நதிகளான, காரகாஷ் நதி ('கருப்பு ஜேட் நதி') மற்றும் யுருங்காஷ் நதி ('வெள்ளை ஜேட் நதி') ஆகியவை இங்கிருந்து தொடங்குகின்றன. 
 
அல்டைன்-டாக் அல்லது அல்டுன் மலைத்தொடர் குன்லுன் மலைத்தொடரின் முக்கிய வடபகுதித் தொடர்களில் ஒன்றாகும். இதன் கிழக்கு நீட்சியான கிலியன் சான் குன்லுன் தொடரின் மற்றொரு முக்கிய மலைத்தொடராகும். தெற்கில் முக்கிய நீட்சியானக மின் சானாக இருக்கிறது.பாயன் ஹர் மலைகள் குன்லுன் மலைத்தொடரின் தெற்கு கிளையாக உள்ளது. இந்த பாயன் ஹர் மலைத்தொடர் சீனாவின் இரண்டு நீளமான நதிகளான, [[யாங்சி ஆறு|யாங்சே]] மற்றும் [[மஞ்சள் ஆறு|மஞ்சள் நதி]] ஆகியவற்றுக்கிடைப்பட்ட நீர் வடிநிலப்பகுதியை உருவாக்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/குன்லுன்_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது