கபீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
அவரது பிறப்பு மற்றும் அவரது பிறந்த குடும்பம் குறித்த பலவிதமான கதைகள் வழக்கில் உள்ளன. அவற்றுள் ஒன்றில், கபீரின் தாய் [[வாரணாசி]]யைச் சேர்ந்த ஒரு பிராமணப் பெண் எனவும், வழக்கமான முறையின்றி கருத்தரித்து, உள்ளங்கை வழியே கபீரைப் பெற்றடுத்துப் பின்னர் அவரை ஒரு கூடையில் வைத்து குளத்தில் விட்டுவிட்டார் எனவும், அக்குழந்தையை ஒரு இசுலாமியர் எடுத்து வளர்த்தார் எனவும் கூறப்படுகிறது.<ref name=hess02/>{{rp|5}}<ref name=hess02/>{{rp|4–5}}<ref name=britannicakabir/> ஆனால் தற்கால அறிஞர்கள் இக்கதைகளுக்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லையெனக் கூறி அவற்றை நிராகரிக்கின்றனர். கபீர் ஒரு [[நெசவுத் தொழில்நுட்பம்|நெசவாள]], இசுலாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராகத்தான் பரவலாகக் கருதப்படுகிறது.<ref name=hess02/>{{rp|3–5}} [[வெண்டி டோனிகர்]] என்ற இந்தியவியலாளர் கபீர் இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், இக்கதைகள் அவரை இசுலாமியத்திலிருந்து இந்து சமயத்திற்கு இழுப்பதாகவும் கருதுகிறார்.<ref>[[வெண்டி டோனிகர்]], ''The Hindus: An Alternative History'', Oxford University Press (2010), p. 462</ref>
 
[[இராமாநந்தர்|இராமாநந்தரின்]] சீடர்களுள் ஒருவராகத்தான் பலரும் கபீரைக் கருதுகின்றனர். இராமாநந்தர், ஒவ்வொருவருக்குள்ளும், ஒவ்வொன்றுக்குள்ளும் பரம்பொருள் இருப்பதாகக் கூறும் அத்வைதத் தத்துவத்தைப் பின்பற்றிய [[வைணவ சமயம்|வைணவக்]] கவிஞராவார்.<ref name="Tinker1990"/><ref>Rekha Pande (2014), Divine Sounds from the Heart—Singing Unfettered in their Own Voices, Cambridge Scholars, {{ISBN|978-1443825252}}, page 77</ref><ref name=ronald>Ronald McGregor (1984), Hindi literature from its beginnings to the nineteenth century, Otto Harrassowitz Verlag, {{ISBN|978-3447024136}}, pages 43–44</ref><ref>Islamicist Dr. Saiyid Athar Abbas Rizvi, in his ''A History of Sufism in India'' (New Delhi: [[Munshiram Manoharlal]], 1983), Vol. II, page 412, states: "The author of the ''Dabistan-i Mazahib'' placed Kabir against the background of the legends of the Vaishnavite ''vairagis'' (mendicants) with whom he was identified, but a contemporary of his, Shaikh 'Abdu'r-Rahman Chisti, combined both the ''Bairagi'' and the ''muwwahid'' traditions about Kabir in his ''Mir'atu'l-asrar'' and also made him a Firdaussiya sufi."</ref>
 
கபீரை முறையாகச் சீடராக ஏற்க இராமாநந்தர் திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும், கபீர் கெட்டிக்காரத்தனத்துடன் இராமநந்தர் கங்கைக்குக் குளிக்க செல்லும் வழியிலிருந்த படிகளில் இருள்பிரியாத விடிகாலையில், சாக்கால் தன்னை மூடிக்கொண்டு கிடக்க, கீழேகிடந்த கபீரைத் தெரியாமல் மிதித்துவிட்ட இராமாநந்தர் "இராமா இராமா!" என்று சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி இராமாநந்தர் கபீரைத் தன் சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று என்ற கருத்து வழக்கிலுள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கபீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது