பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: - சான்றில்லை வார்ப்புரு
→‎top: தெளிவு
வரிசை 1:
[[படிமம்:Boston tea party.jpg|thumb|400px|1773ஆம் ஆண்டு திசம்பர் 16 அன்று பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் என அறியப்படுகின்ற போராட்டத்தைக் காட்டுகிற செதுக்கல் ஓவியம் (படம் வரையப்பட்ட ஆண்டு 1846). அமெரிக்க குடியேறிகள் தொல்குடி அமெரிக்கர்களைப் போன்று உடையணிந்து கொண்டு 342 [[சரக்கு]]ப் பெட்டிகளை கடலில் எறிகின்றனர்.<ref>Alexander, ''Revolutionary Politician'', 125–26</ref>]]
 
'''பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்''' (''Boston Tea Party'') என்பது, [[1773]] ஆம் ஆண்டில் [[பிரித்தானியப் பேரரசு]]க்கு எதிராக [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் குடியேறிகளால் நடத்தப்பட்ட [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்டத்தை]] குறிக்கும். பல ஆண்டுகளாக அமெரிக்கர்களால் பல்வேறு வரிகளை செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அமெரிக்கர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்வதற்கு அனுமதி இல்லாது இருந்தது. அமெரிக்காவில் தேயிலை விற்றுவந்த வணிகர்களுக்கும் விற்கும் விலை வரிகளால் உயர்ந்து அவர்களது இலாபம் குறைந்தது. தவிரவும் வரி செலுத்தாது கடத்தப்பட்ட தேயிலையை, விலை மலிவாக இருந்தமையால், மக்கள் வாங்கத் துவங்கினர். இதனால் அரசர்தங்களது அரசராக இருந்த [[ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்|மூன்றாம் ஜார்ஜின்]] ஆட்சிக்கு எதிராக [[டிசம்பர் 16]] அன்று இந்த எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. <ref>{{Cite book|author=Labaree, Benjamin Woods|title=The Boston Tea Party|location=Boston|publisher=Northeastern University Press|year=1979|isbn=0930350057|pages=141–144}}</ref>அன்றைய நாளில் சில அமெரிக்கர்கள் [[பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி]]யின் கப்பல்களில் ஏறி [[தேநீர்]] பெட்டிகளை [[பாஸ்டன்]] துறைமுகத்தில் கடலில் எறிந்தனர். இந்த நிகழ்வு [[அமெரிக்கப் புரட்சி]]யின் தொடக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.
 
தங்களது கோபத்தைக் காட்டுமுகமாக [[சாமுவேல் ஆடம்ஸ்|சாமுவேல் ஆடம்சும்]] ''விடுதலையின் மகன்கள்'' என அறியப்படும் அமெரிக்கக் குடியேறிகளும் தொல்குடி அமெரிக்கர்களான மகாகாக் இனத்தவரைப் போன்று உடையணிந்து [[பாஸ்டன்]] [[துறைமுகம்|துறைமுகத்தில்]] இறக்குமதிக்காக வந்து சுங்கச்சோதனைக்காக காத்திருந்த தேயிலைப் பெட்டிகள் நிரம்பிய [[கப்பல்]]களில் இருள்நிறைந்த குளிர்கால விடியற்காலை நேரத்தில் ஏறினார். தேயிலைப் பெட்டிகளை தூக்கி நீரில் வீசி எறிந்தனர். இது பிரித்தானிய அரசுக்கு மிகவும் கோபமூட்டியது. நடப்புச் சட்டங்களை [[மாசச்சூசெட்ஸ்]] மாகாணத்திற்கு மட்டும் மேலும் கடுமையாக்கியது. ''பொறுக்கவியலாச் சட்டங்கள்'' என அறியப்படும் இந்த சட்டங்களில் ஒன்றின்படி கடலில் வீசப்பட்ட அனைத்துத் தேயிலைக்கும் மாசச்சூசெட்ஸ் மாநில குடியேறிகள் வரி செலுத்தும் வரை பாஸ்ட்டன் துறைமுகம் மூடப்பட்டது.
 
[[அமெரிக்கப் புரட்சிப் போர்|அமெரிக்கப் புரட்சிப் போரின்]] முதன்மையான துவக்க நிகழ்வுகளில் ஒன்றாக பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் கருதப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்டன்_தேநீர்_கொண்டாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது