"பிளாக்பியர்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,427 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
தந்திரமானவனும் எதையும் திட்டமிட்டுச் செய்யக்கூடியவனுமான ஒரு தலைவனாக இருந்த பிளாக்பியர்ட், பலத்தைப் பயன்படுத்துவதில் அதிக அக்கறை கொள்ளவில்லை. பதிலாக, அவனது பயங்கரமான தோற்றத்தைப் பயன்படுத்தி அவனிடம் பிடிபட்டவர்களிடம் இருந்து தான் விரும்பியதை அடையக்கூடியவனாக இருந்தான். முற்காலத்துக் கொடூரமான கடற்கொள்ளையர் தொடர்பில் நாம் கொண்டிருக்கும் மனப்பிம்பங்களுக்கு மாறாக, தனது குழுவினரின் விருப்பத்துக்கு அமைவாகவே கப்பல்களை அவன் நடத்திச் சென்றான். அவனிடம் பிடிபட்டவர்களைக் கொலை செய்ததாகவோ அல்லது உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தியதாகவோ தகவல்கள் இல்லை. பிளாக்பியர்டின் இறப்பின் பின்னர் அவனை அடிப்படையாகக் கொண்டு பல வகையான கற்பனை ஆக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 
== தொடக்க காலம் ==
இவனது வாழ்வின் தொடக்க காலம் பற்றிய தகவல்கள் குறைவாகவே உள்ளன. இறக்கும்போது இவனுக்கு வயது 35க்கும் 40க்கும் இடையில் இருக்கக்கூடும் எனவும், அதனால் இவன் 1680 அளவில் பிறந்திருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. இவனது சமகால ஆவணங்களில் இவன் பொதுவாக பிளாக்பியர்ட், எட்வார்ட் தட்ச், எட்வார்ட் டீச் ஆகிய பியர்களால் குறிப்பிடப்படுகிறான். இவற்றுள் இறுதியாகக் குறிப்பிடப்பட்ட பெயரே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. ஒரு பழைய மூலம் இவனது குடும்பப் பெயர் "ட்ருமொண்ட்" என்கிறது. ஆனாலும், இதற்கு வேறு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை.
 
[[பகுப்பு:கடற் கொள்ளையர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2522472" இருந்து மீள்விக்கப்பட்டது