தஞ்சாவூர் பாலசரஸ்வதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
பாலசரஸ்வதி, தனது நான்காவது வயதிலேயே [[இசை]]யும் நடனமும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். [[தஞ்சாவூர்]] நால்வர்களில் ஒருவரான [[சின்னையா]]வின் வழிவந்தவரான கண்டப்பா என்பவர் இவரது குரு. ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஐரோப்பார, கிழக்காசியா, வட அமேரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பரத நாட்டியத்தை அரங்கேற்றினார். வெஸ்லின் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக் கழகக் கல்லூரி, வாசிங்டன் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஒரே இந்தியப் பெண் இவர்தான். அன்னா கிசல் காஃப் என்னும் நடன விமர்சகர் இவரை ''உலகின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்'' என பாராட்டியுள்ளார்.<ref>{{cite journal | title=நடனத்தின் ஆணிவேராக திகழும் ஆடற்கலை ஆசான்கள் | author=முனைவர் ம. செ. இரபிசிங் | journal=தி இந்து தமிழ் | year=2017 | month=அக்டோபர் 3}}</ref> அமெரிக்காவின் ஈடிணையற்ற நடன பொக்கிஷங்கள்: முதல் நூறு பேர்’ என்ற புகழ்பெற்ற பட்டியலில் சேர்க்கப்பட்ட மேற்குலகைச் சேராத ஒரே கலைஞர் பாலசரஸ்வதிதான்.
 
''வழிவழியாகக் கையளிக்கப்பட்ட பரதக் கலையை சாஸ்திரத்துக்கு உள்ளே அடைக்கும் முயற்சியை தொடர்ந்து பாலசரஸ்தி எதிர்த்தார், மேலும் இந்தக் கலையை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டுமே உரியதாக ஆக்கிய பிராமணிய ஆக்கிரமிப்பை எதிர்த்ததால், அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கான அங்கீகாரங்கள் பெரிதாக இந்தியாவில் அளிக்கப்படவில்லை அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் புறக்கணிப்பானது தொடர்கிறது''. என்று பாலசரஸ்தியின் மருமகனும் மிருதங்கக் கலைஞருமான டக்ளஸ் எம். நைட் குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/literature/article23866795.ece | title=பாலாவின் பெயர் மறைக்கப்படுவதில் அரசியல் இருக்கிறது!: டக்ளஸ் எம்.நைட் நேர்காணல் | publisher=தி இந்து தமிழ் | work=செவ்வி | date=2018 மே 13 | accessdate=14 மே 2018 | author=ஆசை}}</ref>
 
பாலசரஸ்வதி வரலாற்றை ‘பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்’ என்ற நூலை டக்ளஸ் எம். நைட் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார், இது தமிழிலும் வெளிவந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_பாலசரஸ்வதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது