"ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,863 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== ஆக்சிசனேற்றி மற்றும் ஒடுக்கிகள் ==
பிற தனிமங்களை ஒடுக்கக் கூடிய பொருள் [[ஒடுக்கி]] ''(reductant)'' என்றும், பிற தனிமங்களை ஆக்கிசனேற்றம் செய்யக் கூடியவை [[ஆக்சிசனேற்றி]] என்றும் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கண்ட வினையில் [[சோடியம்]](Na) ஒடுக்கியாக செயல்பட்டு, [[புளோரின்|ஃப்ளூரினை]](F) ஒடுக்கமடையச் செய்கிறது. அதேபோல் [[புளோரின்|ஃப்ளூரின்]](F) ஆக்சிசனேற்றியாகச் செயல்பட்டு, சோடியத்தை(Na) ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது. <br />
== ஒடுக்க-ஏற்ற வினைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ==
[[File:redox reaction.png|thumb|300px|right|ஒடுக்க -ஏற்ற வினைகளுக்குரிய விளக்கப்படம்.]]
ஐதரசன் மற்றும் புளோரின் ஆகிய வாயுக்களுக்கு இடையில் நிகழும் வேதிவினையை ஒடுக்க-ஏற்ற வினைகளுக்கு சிறந்த உதாரணமாகக் கூறலாம். இவ்வினையில் ஐதரசன் ஆக்சிசனேற்றம் அடைகிறது. புளோரின் ஒடுக்கம் அடைகிறது.
:{{chem|H|2}} + {{chem|F|2}} → 2&nbsp;HF
இந்த ஒட்டுமொத்த வேதிவினையை நாம் இரண்டு சமன்பாடுகளாகப் பிரித்து எழுதலாம்.
ஆக்சிசனேற்றத்தை,
:{{chem|H|2}} → 2&nbsp;[[Hydrogen ion|H<sup>+</sup>]] + 2&nbsp;[[Electron|e<sup>−</sup>]]
ஒடுக்க வினையை,
:{{chem|F|2}} + 2&nbsp;e<sup>−</sup> → 2&nbsp;[[Fluoride|F<sup>−</sup>]]
இவ்விரண்டு அரை வினைகளையும் தனித்தனியாக ஆராய்ந்து அலசினால் ஒட்டுமொத்த ஒடுக்க ஏற்ற வினையை நம்மால் கூடுதலாக புரிந்துகொள்ள இயலும். ஒட்டுமொத்த ஒடுக்க ஏற்ற வினையின் முடிவில் நிகர மின்சுமையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஆக்சிசனேற்ற வினையில் உபரியாகக் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஒடுக்க வினையில் எடுத்துக் கொள்ளப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கிறது.
மூலக்கூற்று வடிவிலும் இத்தனிமங்க்களின் ஆக்சிசனேற்ற நிலை எப்போதும் 0 என்ற நிலையிலேயே உள்ளது. முதல் பாதி வினையில் ஐதரசன் 0 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் இருந்து +1 என்ற ஆக்சிசனேற்ற நிலைக்கு ஆக்சிசனேற்றமடைகிறது. இரண்டாவது பாதி வினையில் புளோரின் 0 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் இருந்து -1 என்ற நிலைக்கு ஒடுக்கமடைகிறது.
இரண்டு அரைபாதி வினைகளையும் ஒன்றாகச் சேர்க்கும் போது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை இரத்து ஆகிறது.
:{|
|align=right|{{chem|H|2}}
|→
|align=left|2&nbsp;H<sup>+</sup> + 2&nbsp;e<sup>−</sup>
|-
|align=right|{{chem|F|2}} + 2&nbsp;e<sup>−</sup>
|→
|align=left|2&nbsp;F<sup>−</sup>
|-
|colspan=3|<hr />
|-
|align=right|H<sub>2</sub> + F<sub>2</sub>
|→
|align=left|2&nbsp;H<sup>+</sup> + 2&nbsp;F<sup>−</sup>
|}
அயனிகள் தொடர்ந்து இணைந்து ஐதரசன் புளோரைடு சேர்மத்தை உருவாக்குகின்றன,
:2&nbsp;H<sup>+</sup> + 2&nbsp;F<sup>−</sup> → 2&nbsp;HF
ஒட்டுமொத்த வினையை பின்வருமாறு எழுதலாம்.
:{{chem|H|2}} + {{chem|F|2}} → 2&nbsp;HF
== உலோக இடப்பெயர்ச்சி ==
[[File:Galvanic cell with no cation flow.png|thumb|350px|கால்வானிக் மின்கலன் போன்ற ஒரு மின்வேதியியல் செல்லில் ஏற்ற ஒடுக்க வினை முக்கியப் பங்கு வகிக்கிறது. துத்தநாக மின்வாய் ZnSO<sub>4</sub> கரைசல் மற்றும் ஒருகம்பியுடனும், நுண் துளை வட்டுடன் தாமிர மின்வாய் CuSO<sub>4</sub> கரைசலிலும் வைக்கப்பட்டு மின்கலன் தயாரிக்கப்படுகிறது ]]
இந்த வகையிலான வினையில், ஒரு சேர்மத்திலுள்ள அல்லது ஒரு கரைசலிலுள்ள உலோக அணுவானது மற்றொரு உலோகத்தின் அணுவால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்ற வகை வினையாகும்.
எடுத்துக்காட்டாக துத்தநாகம் உலோகம் ஒரு தாமிர(II) சல்பேட்டுக் கரைசலில் வைக்கப்படும் போது துத்தனாகம் தாமிரத்தை இடப்பெயர்ச்சி செய்கிறது. தாமிரம் வீழ்படிவாக மாறுகிறது.
Zn(நீ)+ CuSO<sub>4</sub>(நீரிய) → ZnSO<sub>4</sub>(நீரிய) + Cu(திண்மம்)
மேற்கண்ட வினையில் துத்தநாகம் தனிமமானது தாமிர சல்பேட்டிலிருந்த தாமிரத்தை இடப்பெயர்ச்சி செய்துவிட்டு தாமிரம் உலோகத்தை தனித்து விடுகிறது,
இவ்வினைக்கான அயனிச் சமன்பாடு:
:Zn + Cu<sup>2+</sup> → Zn<sup>2+</sup> + Cu
மேற்கண்ட இரண்டு அரை வினைகள் போல இங்கு துத்தநாகம் ஆக்சிசனேற்றமடைகிறது.
:Zn → Zn<sup>2+</sup> + 2&nbsp;e<sup>−</sup>
இங்கு தாமிரம் ஒடுக்கப்படுகிறது.
:Cu<sup>2+</sup> + 2&nbsp;e<sup>−</sup> → Cu
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஒடுக்கி]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524042" இருந்து மீள்விக்கப்பட்டது