சீனப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சீனப் பூங்கா''' (Chinese garden) என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''சீனப் பூங்கா''' (Chinese garden) என்பது, [[சீனா]]வில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளர்ச்சியடைந்துவந்த [[நிலத்தோற்றம்|நிலத்தோற்றப்]] பூங்காப் பாணியைக் குறிக்கும். இவ்வகைப் பூங்காக்கள், சீனப் பேரரசர்களாலும், பிற அரச குடும்பத்தவராலும் கேளிக்கைகளுக்காகவும் பிறருக்குத் தமது செல்வாக்கைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட பூங்காக்களையும்; சிந்திப்பதற்கும், வெளி உலகில் இருந்து விலகுவதற்கும் [[அறிஞர்]]கள், [[புலவர்]]கள், முன்னாள் அரச அலுவலர்கள், பரை வீரர்கள், [[வணிகர்]]கள் போன்றோரால் அமைக்கப்பட்ட சிறிய பூங்காக்களையும் உள்ளடக்கும். இவர்கள், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்க வேண்டிய ஒத்திசைவை வெளிக்காட்டுவதற்காகச் சிறிய நிலத்தோற்றங்களை உருவாக்கினர்.
 
ஒரு சீனப் பூங்கா, மதிலால் சூழப்பட்டிருப்பதோடு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடாகங்களையும்; பாறை வேலைகள், மரங்கள், பூஞ்செடிகள், பல வகையான மண்டபங்கள், அவற்ரை இணைக்கும் வளைந்து வளைந்து செல்லும் பாதைகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும். ஒரு கட்டிட அமைப்பில் இருந்து இன்னொடு அமைப்புக்குச் செல்லுபோது கவனமாக உருவாக்கப்பட்ட காட்சிகளை, நிலத்தோற்ற ஓவியச் சுருள் ஒன்றை விரித்துப் பார்ப்பதுபோல் ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்க முடியும்.
 
[[பகுப்பு:பூங்காக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சீனப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது