சீனப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,601 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
== வரலாறு ==
பதிவுகளின்படி மிகப் பழைய சீனப் பூங்காக்கள் சாங் வம்சக் காலத்தில் (கிமு 1600–1046) மஞ்சள் ஆற்றுப் பள்லத்தாக்குப் பகுதியில் உருவாகின. இப்பூங்காக்கள் பெரியனவாகவும், மூடப்பட்டவையாகவும் இருந்தன. இங்கே அரசர்களும், பிரபுக்களும் வேட்டையாடினர் அல்லது பழ மரங்களும் மரக்கறி வகைகளும் வளர்க்கப்பட்டன. ஆமை ஓடுகளில் எழுதப்பட்ட தொடக்ககாலப் பதிவுகளில் பூங்காவைக் குறிக்க, ''யூ'' (you), ''பு'' (pu), ''யுவான்'' (yuan) ஆகிய மூன்று குறியீடுகள் பயன்பட்டுள்ளன. ''யூ'', பறவைகளும் விலங்குகளும் வளர்க்கப்பட்ட ஒரு அரச பூங்கா. ''பு'' தாவரங்களுக்கான பூங்கா. கின் வம்சக் காலத்தில் (கிமு 221–206) எல்லா பூங்காக்களையும் குறிக்க ''யுவான்'' என்ற குறியீடே பயன்பட்டது. ''யுவான்'' என்னும் குறியீடு தொடக்கத்தில் பூங்காவைக் குறிக்கும் ஒரு சிறிய படம் ஆகும். இது மதில் எனக் கருதத் தக்க ஒரு சதுரத்துள் வரையப்பட்டுள்ளது. இப்படத்தில் கட்டிடம் ஒன்றின் நிலப்படம், குளத்தைக் குறிக்கும் ஒரு சிறிய சதுரம், தாவரங்களை அல்லது மாதுளை மரத்தைக் காட்டும் ஒரு குறியீடு என்பவை காணப்படுகின்றன.
 
சாங் வம்சக் காலத்தைச் சேர்ந்த ஒரு பெயர் பெற்ற பூங்கா "ஆவிக்குரிய தளமேடை, தடாகம், பூங்கா" (Terrace, Pond and Park of the Spirit) என்பதாகும். இது அரசர் வென்வாங் என்பவரால் தலைநகர் யின்னுக்கு மேற்கே உருவாக்கப்பட்டது. இப்பூங்கா ஒரு செந்நெறிக் கவிதையில் பின்வருமாறு வருணிக்கப்படுகிறது.
: பேரரசர் தனது உலாவை ஆவிக்குரிய பூங்காவில் மேற்கொள்கிறார்
: மான்கள் முழங்காலிட்டுக் குட்டிகளுக்குப் பாலூட்டுகின்றன
: மான்கள் அழகாகவும் பளபளப்பாகவும் உள்ளன
: களங்கமற்ற கொக்குகள் பிரகாசமான வெள்ளை இறகுகளைக் கொண்டவை
: பேரரசர் தனது உலாவை ஆவிக்குரிய தடாகத்தை நோக்கி மேற்கொள்கிறார்
: நீர்நிலைகள் நெளிந்து செல்லும் மீன்களால் நிரம்பியுள்ளன.
 
[[பகுப்பு:பூங்காக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524159" இருந்து மீள்விக்கப்பட்டது