"சீனப் பூங்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,304 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
: நீர்நிலைகள் நெளிந்து செல்லும் மீன்களால் நிரம்பியுள்ளன"<ref>Cited in Che Bing Chiu, Jardins de Chine, p. 11.</ref>
 
இன்னொரு தொடக்ககால அரச பூங்கா ''சக்குயி'' அல்லது ''மணல் மேடுகள்'' ஆகும். இது சாங் அரசர் சூ (கிமு 1075–1046) என்பவரால் அமைக்கப்பட்டது. இதில் ஒரு மண்மேடை இருந்தது. இது சதுரமான பூங்காவில் நடுவில் ஒரு கவனிப்பு மேடையாகச் செயற்பட்டது. சீன இலக்கியத்தின் தொடக்ககால ஆக்கங்களில் ஒன்றான "பெரும் வரலாற்றாளனின் பதிவுகள்" (Records of the Grand Historian) (சிஜி) என்னும் நூலில் இப்பூங்கா பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.<ref>Tan, p. 10. See also Che Bing Chiu, ''Jardins de Chine'', p. 11.</ref>
 
மேற்படி நூலின்படி இப்பூங்காவின் மிகப் பிரபலமான ஒரு அம்சம் ''வைன் தடாகமும் இறைச்சிக் காடும்'' (酒池肉林) ஆகும். அரச மாளிகை நிலத்தில், பல சிறிய தோணிகளுக்குப் போதுமான பெரிய குளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இக்குளத்தின் உட்புறம், கடற்கரையில் இருந்து கொண்டுவரப்பட்ட நீள்வட்ட வடிவமான மினுக்கப்பட்ட கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்தக் குளம் வைனால் நிரப்பப்பட்டது. குளத்தின் நடுப் பகுதியில் ஒரு தீவு அமைக்கப்பட்டது. அத்தீவில் மரங்கள் நடப்பட்டுக் கிளைகளில் இருந்து வாட்டப்பட்ட இறைச்சித் துண்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அரசரும், அவரது நண்பர்களும், அந்தப்புரப் பெண்களும் தோணிகளில் பயணம் செய்தபடியே தமது கைகளால் வைனை அள்ளிக் குடித்தனர். மரங்களில் இருந்து இறைச்சித் துண்டுகளைப் பறித்து உண்டனர். பிற்காலச் சீன மெய்யியலாளர்களும், வரலாற்றாளர்களும் இப்பூங்காவைத் தரங்கெட்ட நிலைக்கும், கீழான சுவைக்கும் எடுத்துக்காட்டாகக் கொண்டனர்.<ref>Che Bing Chiu, "Jardins de Chine, ou la quete du paradis", p. 11.</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524175" இருந்து மீள்விக்கப்பட்டது