ஓசோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 69:
ஓசோன் மென்எதிர்வ காந்தத் தன்மை (diamagnetic) கொண்டது.
 
== வினைகள் ==
ஓசோன் மிகவும் சக்திவாய்ந்த ஆக்சிசனேற்ற முகவராக அறியப்படுகிறது. ஆக்சிசனைக் காட்டிலும் மிகவும் வலுவானதாகவும் கருதப்படுகிறது. அதிகமான அடர்த்தி நிலைகளில் ஓசோன் நிலைப்புத்தன்மை அற்றதாகச் சிதைவடைந்து சாதாரணமான ஈரணு ஆக்சிசன் மூலக்கூறாக மாறிவிடுகிறது. வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் காற்று இயக்கம் போன்ற வளிமண்டல சூழல்களுக்கு ஏற்ப ஓசோனின் அரை வாழ்வுக்காலம் மாறுபடுகிறது. வாயுவை நகர்த்தக் கூடிய வகையில் ஒரு மின்விசிறியுடன் கூடிய முத்திரையிடப்பட்ட அறையில் இருக்கும் ஓசோன் வாயுவின் அரை வாழ்வுக் காலம் அறை வெப்ப நிலையில் சுமார் ஒரு நாள் எனக் கூறப்படுகிறது<ref>Half-life time of ozone as a function of air conditions and movement McClurkin, J.D.*#1, Maier, D.E.2. {{DOI|10.5073/jka.2010.425.167.326}}</ref>. வளிமண்டல சூழலில் ஓசோன் வாயுவின் அரை ஆயுட்காலம் அரைமணி நேரம் மட்டுமே என சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன<ref>[http://gcmd.gsfc.nasa.gov/Resources/FAQs/ozone.html – Earth Science FAQ: Where can I find information about the ozone hole and ozone depletion?] {{webarchive|url=https://web.archive.org/web/20060601061532/http://gcmd.gsfc.nasa.gov/Resources/FAQs/ozone.html |date=2006-06-01 }} ''Goddard Space Flight Center'', National Aeronautics and Space Administration, March 2008.</ref>
:2 {{chem|O|3}} → 3 {{chem|O|2}}
வெப்ப நிலை அதிகரிக்கும்போது இவ்வினையின் வேகமும் வேகமாக அதிகரிக்கின்றது. ஓசோனை எரிவிக்க ஒரு தீப்பொறியின் தூண்டல் கூட போதுமானதாகும். மோலார் அடர்த்தி 10% அல்லது அதற்கு மிகையான அடர்த்திகளில் இத்தீப்பற்றல் தோன்றுகிறது <ref>{{cite journal|url=http://www.iitk.ac.in/che/jpg/papersb/full%20papers/K-106.pdf|doi=10.1016/j.jlp.2005.07.020|title=Explosion properties of highly concentrated ozone gas|year=2005|last1=Koike|first1=K|last2=Nifuku|first2=M|last3=Izumi|first3=K|last4=Nakamura|first4=S|last5=Fujiwara|first5=S|last6=Horiguchi|first6=S|journal=Journal of Loss Prevention in the Process Industries|volume=18|page=465|issue=4–6|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20090327085613/http://www.iitk.ac.in/che/jpg/papersb/full%20papers/K-106.pdf|archivedate=2009-03-27|df=}}</ref>.
ஆக்சிசனிலிருந்து உருவாக்கப்படும் மின்வேதியியல் மின்கலன்களில் நேர்மின்வாயில் ஓசோன் மின்வேதியியல் முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆராய்ச்சி நோக்கில் சிறிய அளவில் தேவைப்படும் நிகழ்வுகளில் ஓசோன் இம்முறையில் தயாரித்துக் கொள்ளப்படுகிறது.
{{chem|O|3}}(g) + 2H<sup>+</sup> + 2e<sup>−</sup> ←→ {{chem|O|2}}(g) + {{chem|H|2|O}} E°= 2.075V <ref>{{Cite book|title=Quantitative Chemical Analysis|last=Harris|first=Daniel|publisher=Freeman|year=2007|isbn=|location=|pages=279|via=}}</ref>
ஆப்மான் வாயு உபகரணத்தில் தண்ணிரை நீராற்பகுக்கும் போது இவ்வினை ஒரு விரும்பத்தகாத வினையாகப் பார்க்கப்படுகிறது. மின் அளவு தேவக்கு அதிகமாக இங்கு பயன்படுத்தப்படுகிறது.
=== உலோகங்க்களுடன் வினை ===
தங்கம், பிளாட்டினம், இரிடியம் உலோகங்கள் நீங்கலாக மற்ற உலோகங்கள் அனைத்தையும் ஓசோன் ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது. உலோகங்கள் அவற்றின் அதிகபட்ச ஆக்சிசனேற்ற நிலையில் உலோக ஆக்சைடுகளாக ஆக்சிசனேற்றம் அடைகின்றன. உதாரணமாக,
: {{chem|Cu}} + {{chem|O|3}} → {{chem|Cu|O}} + {{chem|O|2}}
=== நைட்ரசன் மற்றும் கார்பன் சேர்மங்களுடன் வினை ===
நைட்ரிக் ஆக்சைடை நைட்ரசன் டை ஆக்சைடாக ஓசோன் ஆக்சிசனேற்றுகிறது:
: NO + {{chem|O|3}} → {{chem|N|O|2}} + {{chem|O|2}}
இவ்வினை வேதியியல்வொளிர்திறனுடன் நிகழ்கிறது. {{chem|N|O|2}} மேலும் ஆக்சிசனேற்றமடைகிறது:
: {{chem|N|O|2}} + {{chem|O|3}} → {{chem|N|O|3}} + {{chem|O|2}}
உருவாகும் {{chem|N|O|3}} சேர்மம் {{chem|N|O|2}} உடன் வினைபுரிந்து {{chem|N|2|O|5|link=Dinitrogen pentoxide}} உருவாகிறது.
NO<sub>2</sub>, ClO<sub>2</sub> மற்றும் {{chem|O|3}} வாயுக்களில் இருந்து திண்ம நைட்ரோனியம் பெர்குளோரேட்டு உருவாகிறது.
: {{chem|N|O|2}} + {{chem|Cl|O|2}} + 2 {{chem|O|3}} → {{chem|N|O|2|Cl|O|4}} + 2 {{chem|O|2}}
ஓசோன் அமோனிய உப்புகளுடன் வினைபுரிவதில்லை. ஆனால் இது அமோனியாவை அமோனியம் நைட்ரேட்டாக ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது.
: 2 {{chem|N|H|3}} + 4 {{chem|O|3}} → {{chem|N|H|4|N|O|3}} + 4 {{chem|O|2}} + {{chem|H|2|O}}
அறை வெப்ப நிலையிலும் கூட ஓசோன் கார்பனுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடைக் கொடுக்கிறது.
: C + 2 {{chem|O|3}} → {{chem|C|O|2}} + 2 {{chem|O|2}}
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/ஓசோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது