"கிளைக்கோபுரதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,305 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
கிளைக்கோபுரதத்தின் அமைப்பில் 8 ஒற்றைச்சர்க்கரைடுகள் மட்டுமே இணைந்துள்ளன. ஓலிகோசர்க்கரைடுகள் புரதங்களுடன் N- அல்லது O- கிளைக்கோசைடிக் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன. [[லெக்டின்|லெக்டின்கள்]], மியுசின்கள், பாலிபெப்டைடு [[இயக்குநீர்|இயக்குநீர்கள்]] கிளைக்கோபுரதங்கள் ஆகும்.<ref>https://www.sciencedirect.com/topics/agricultural-and-biological-sciences/glycoprotein</ref>
 
சர்க்கரை, செல்களில் எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் கோல்கை உறுப்புகள் ஆகியவற்றில் புரதத்துடன் இணைக்கப்படலாம். N- மூலமாக இணைக்கப்பட்ட சர்க்கரைடுகள் எண்டோபிளாச வலைப்பின்னலுடனும், மேலும் O- மூலமாக இணைக்கப்பட்ட கிளைக்கோபுரதங்கள் கோல்கை உறுப்புக்களுடனும் இணைகின்றன. மூன்று வெவ்வேறு வகையான கிளைக்கோ புரதங்கள் உள்ளன. அவை அவற்றின் தொகுப்பு வினைவழிமுறை மற்றும் அமைப்பு மூலம் வேறுபடுத்தப்படுகின்றன. இந்த கிளைகோபுரதங்கள் N- ஆல் இணைக்கப்பட்டவை, O- ஆல் இணைக்கப்பட்டவை மற்றும் நொதியல்லாத கிளைக்கோப்புரதங்கள் என்பவை ஆகும்.<ref>https://www.reference.com/science/functions-glycoproteins-9541ff78d0d60647#</ref>
 
உடலில் காணப்படும் செல்களோடு இயைந்து ஒழுகும் போது திசு செயல்பாட்டு வளர்ச்சியில் கிளைக்கோப்புரதங்கள் உதவி செய்கின்றன. கிளைக்கோபுரதங்கள் இணைப்பு திசுக்கள், செல் சுவர்கள் மற்றும் இரத்த பிளாசுமாக்களில் காணப்படுகின்றன. அவை உடலில் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து தமது கட்டுமான வேறுபாடுகளை வெளிக்காட்டுகின்றன. அவை விந்தணுக்களின் மேற்பரப்பில் அமைந்துள்ள காரணத்தால் இனப்பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிளைக்கோபுரதங்கள் பிளாசுமா படலத்தின் ஊடுருவு திறனை மாற்றியமைப்பதன் மூலம் உயிரணுக்களுக்கு முட்டைகளை எளிதில் ஈர்க்க உதவுகின்னறன.<ref>https://www.reference.com/science/functions-glycoproteins-9541ff78d0d60647#</ref>
 
== குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524558" இருந்து மீள்விக்கப்பட்டது