மிலோவின் வீனசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
== கண்டுபிடிப்பும் வரலாறும் ==
"மிலோவின் ஆஃப்ரோடைட்டு" சிலை 1820 ஏப்ரல் 8 ஆம் தேதி யோர்கோசு கென்ட்ரோட்டாசு (Yorgos Kentrotas) என்னும் உழவர் ஒருவரால், பழைய மிலோசு நகரத்தின் அழிபாடுகளுக்குள் புதையுண்டிருந்த மாடக்குழி ஒன்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொதுவாக உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்விடம் முன்னர் ஓட்டோமான் பேரரசின் பகுதியாக இருந்த ஏஜியனின் மிலோசுத் தீவில் உள்ளது. இவ்விடம் தற்காலத்தில் திரிப்பிட்டி என அழைக்கப்படும் ஒரு ஊர் ஆகும். பிற இடங்களில் இச்சிலையைக் கண்டுபிடித்தவர்கள் யோர்கோசு பொட்டோனிசுவும் அவரது மகன் அந்தோனியோவும் என அடையாளம் காணப்படுகின்றது. பால் காரசு (Paul Carus) இச்சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம் ஒரு பழைய நாடக அரங்கம் என்றும், அது தீவின் தலைநகரான காசுட்ரோவுக்கு அண்மையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பொட்டோனிசும் அவரது மகனும் பாரமான கற்பலகை ஒன்றால் மூடப்பட்டிருந்த சிறிய நிலக்கீழ் குகை ஒன்றைத் தற்செயலாகக் கண்டனர் என்றும், அதற்குள் இரண்டு துண்டுகளாகக் காணப்பட்ட சலவைக்கற் சிலையும், மேலும் பல உடைந்த சலவைக்கற் துண்டுகளும் இருந்ததாகவும், இது 1820 பெப்ரவரியில் நடந்ததாகவும் அவர் கூறுகிறார். இவரது இக்கூற்று "செஞ்சுரி சஞ்சிகை" யில் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மிலோவின்_வீனசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது