"மிலோவின் வீனசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

838 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
"மிலோவின் ஆஃப்ரோடைட்டு" சிலை 1820 ஏப்ரல் 8 ஆம் தேதி யோர்கோசு கென்ட்ரோட்டாசு (Yorgos Kentrotas) என்னும் உழவர் ஒருவரால், பழைய மிலோசு நகரத்தின் அழிபாடுகளுக்குள் புதையுண்டிருந்த மாடக்குழி ஒன்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொதுவாக உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்விடம் முன்னர் ஓட்டோமான் பேரரசின் பகுதியாக இருந்த ஏஜியனின் மிலோசுத் தீவில் உள்ளது. இவ்விடம் தற்காலத்தில் திரிப்பிட்டி என அழைக்கப்படும் ஒரு ஊர் ஆகும். பிற இடங்களில் இச்சிலையைக் கண்டுபிடித்தவர்கள் யோர்கோசு பொட்டோனிசுவும் அவரது மகன் அந்தோனியோவும் என அடையாளம் காணப்படுகின்றது. பால் காரசு (Paul Carus) இச்சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம் ஒரு பழைய நாடக அரங்கம் என்றும், அது தீவின் தலைநகரான காசுட்ரோவுக்கு அண்மையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பொட்டோனிசும் அவரது மகனும் பாரமான கற்பலகை ஒன்றால் மூடப்பட்டிருந்த சிறிய நிலக்கீழ் குகை ஒன்றைத் தற்செயலாகக் கண்டனர் என்றும், அதற்குள் இரண்டு துண்டுகளாகக் காணப்பட்ட சலவைக்கற் சிலையும், மேலும் பல உடைந்த சலவைக்கற் துண்டுகளும் இருந்ததாகவும், இது 1820 பெப்ரவரியில் நடந்ததாகவும் அவர் கூறுகிறார். இவரது இக்கூற்று "செஞ்சுரி சஞ்சிகை" யில் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது.
 
ஆசுத்திரேலிய வரலாற்றாளர் எட்வார்டு டுயிக்கர் (Edward Duyker) 1820 இல் பிரான்சுத் தூதுவராக மிலோசில் இருந்த லூயிசு பிரெசுட் (Louis Brest) என்பவர் எழுதிய கடிதம் ஒன்றைச் சான்று காட்டி, சிலையைக் கண்டுபிடித்தவர் தியோடோரசு கென்ரோட்டாசு என்றும், பின்னர் கண்டுபிடிப்புக்கு உரிமை கோரிய தியோடோரசின் இளைய மகன் "ஜோர்ஜஸ்" (யோர்கசு என்று ஒலிக்கப்படும்) என்பவனோடு தான் குழப்பிக்கொண்டதாகவும் கூறுகிறார். டுயிக்கரின் கூற்றுப்படி, முன்னர் உரோம உடற்பயிற்சிக் கூடத்தின் ஒரு பகுதியாக இருந்த அழிந்துபோன சிற்றாலயம் ஒன்றிலிருந்து கல் ஒன்றை கென்ட்ரோட்டாசு அகற்றியபோது, அதன் கீழ் ஒரு நிலக்கீழ் வெளியிடம் இருந்ததாகவும் இந்த வெளியிடத்துக்கு உள்ளேயே கென்ட்ரோட்டாசு முதலில் சிலையின் மேற்பகுதியைக் கண்டதாகவும் தெரிகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2525539" இருந்து மீள்விக்கப்பட்டது