லின்டன் பி. ஜான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rsmn, லின்டன் பி.ஜான்சன் பக்கத்தை லின்டன் பி. ஜான்சன் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: விக்கி இலக்கணம்
வரிசை 72:
 
டெக்சசின் இசுடோன்வாலில் பண்ணைவீட்டில் பிறந்த ஜான்சன் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக பேராய உதவியாளராக பணியாற்றியுள்ளார். 1937இல் ஐக்கிய அமெரிக்க மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.1948இல் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951இல் மேலவை பெரும்பான்மை கொறடாவாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1953இல் மேலவை சிறுபான்மைத் தலைவராகவும் 1955இல் மேலவை பெரும்பான்மை தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மேலவையில் பணியாற்றியபோது அவரது அடக்கியாள்கின்ற ஆளுமைக்காகவும் சட்டங்களை நிறைவேற்ற செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளை வலுக்கட்டாயப்படுத்தும் "ஜான்சன் செய்முறைக்காகவும்" அறியப்பட்டார். 1960 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட முன்வேட்பு கட்சித் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெறாத நிலையில், வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட [[மாசச்சூசெட்ஸ்]] செனட்டர் [[ஜான் எஃப். கென்னடி]] தேர்தல் கூட்டாளியாக இருக்க சம்மதித்தார். இருவரும் 1961ஆம் ஆண்டுத் தேர்தலில் முறையே [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சியின்]] [[ரிச்சர்ட் நிக்சன்|நிக்சனையும்]] என்றி கபோட்டையும் வென்றனர். ஜான்சன் துணைக் குடியரசுத் தலைவராக சனவரி 20, 1961இல் பதவியேற்றார். 1963ஆம் ஆண்டில் நவம்பர் 22 அன்று கென்னடி [[டாலஸ்|டாலசில்]] கொல்லப்பட அரசுத்தலைவர் வாரிசுவரிசையில் அடுத்திருந்த ஜான்சன் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். அடுத்த ஆண்டில், 1964, குடியரசுத் தலைவர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் [[அரிசோனா]]வின் [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை உறுப்பினர்]] பேரி கோல்டுவாட்டரைத் தோற்கடித்தார்.
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/லின்டன்_பி._ஜான்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது