பி. டி. பர்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,170 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(→‎top: *விரிவாக்கம்*)
'''பைனியசு டெய்லர் பர்னம்''' (''Phineas Taylor Barnum'', சூலை 5, 1810 – ஏப்ரல் 7, 1891) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] காட்சிச்சாலை உரிமையாளரும் அரசியல்வாதியும் வணிகரும் ஆவார். இவர் கொண்டாடப்படும் ஏமாற்றுக் காட்சிகளை ஊக்குவித்ததற்காகவும் பர்னம் & பெய்லி [[வட்டரங்கு|வட்டரங்கை]] (1871–2017) நிறுவியதற்காகவும் நினைவு கொள்ளப்படுகிறார்.<ref>[http://asp6new.alexanderstreet.com/atho/atho.detail.people.aspx?personcode=per0026627 North American Theatre Online: ''Phineas T. Barnum'']</ref> எழுத்தாளர், பதிப்பாளர், வள்ளல், அரசியல்வாதி என்ற பன்முகத் திறன் கொண்டிருந்தாலும் அவருடைய கூற்றுப்படி, "நான் தொழில்முறையாக ஒரு காட்சியாளர்...அனைத்துப் பிற முலாம்பூச்சும் என்னை வேறாக்காது"<ref name="Kunhardt 1995 vi">{{harvnb|Kunhardt|Kunhardt|Kunhardt|1995|p=vi}}</ref>. தனது தனிக் கொள்கை "தன் பேழைகளில் பணத்தை நிரப்புவதுதான்" எனவும் கூறியுள்ளார்.<ref name="Kunhardt 1995 vi"/> "ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஏமாளி பிறக்கிறான்" என்ற புகழ்பெற்ற சொற்றொடர் பர்னமினுடையதாக குறிப்பிடப்படுகின்றது;<ref>Shapiro, Fred R. ''The Yale Book of Quotations.'' New Haven: Yale UP, 2006. p. 44</ref> ஆனால் இதனை அவர்தான் கூறியது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.
 
நியூயார்க் நகரத்தில் இரண்டு அமெரிக்க அருங்காட்சியகங்களை நிறுவினார்; பிராட்வேயில் ஒன்றும் ஆன் சாலையில் ஒன்றுமாக இருந்தன. 18ஆம் நூற்றாண்டில் நகர மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த [[இயற்கை வரலாறு]] பொருட்களை இந்த அருங்காட்சியகங்களில் வைத்திருந்தார். இங்கு ''பிஜி மெர்மெய்டு'' போன்ற சட்டத்திற்குட்பட்ட ஏமாற்றுக் காட்சிகளை நடத்தினார். இங்குதான் மிகக் குள்ளமான ஜெனரல் டாம் தம்பை காட்சிகளில் அறிமுகப்படுத்தினார். ஓபரா பாட்டுக்களைப் பாடி ''சுவீடிய நைட்டிங்கேல்'' எனப் பெயரெடுத்த ஜென்னி லின்டும் அமெரிக்காவில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவரே. பர்னமின் இரண்டாவது அருங்காட்சியகம் தீக்கிரையானபோது பர்னம் [[வட்டரங்கு|வட்டரங்கை]] நிறுவினார். இதில்தான் ''ஜம்போ'' எனப் பெயரிட்ட யானையைக் காட்சிப்படுத்தினார்.
==வாழ்க்கை வரலாறு==
பர்னம் கனெடிகட்டின் பெதல் நகரில் பிறந்தார். தனது இருபதாம் அகவையிலேயே சிறிய வணிகங்களை மேற்கொண்டு வந்தார். வாரமொருமுறை இதழையும் நடத்தி வந்தார். 1834இல் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்திற்கு]] குடிபெயர்ந்தார். மனமகிழ் கலைகளில் ஈடுபாடு கொண்டு முதலில் பல்வகை நிகழ்ச்சிகள் கொண்ட ''பர்னமின் அறிவியல் மற்றும் இசைக்கான பெருமேடை''யை நடத்தினார். இசுகட்டர் நடத்திவந்த அருங்காட்சியகத்தை விலைக்கு வாங்கி தனது பெயரில் நடத்தினார். இந்த அருங்காட்சியகத்தை மேடையாகக் கொண்டு பலவித ஏமாற்று வித்தைகள், ஆர்வத்தைக் களரும் பிஜி மெர்மெய்டு போன்ற காட்சிகளை அறிமுகப்படுத்தினார்.<ref name="Philip B. Kunhardt, et al., p. 73">{{harvnb|Kunhardt|Kunhardt|Kunhardt|1995|p=73}}</ref> In 1850இல் பாடகி ஜென்னி லின்டின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தார். இதற்காக ஓரிரவிற்கு $1,000 வீதம் 150 இரவுக் காட்சிகளை நடத்தினார். 1850களில் தவறான முதலீடுகளால் பொருளியல்நிலை சரியத் தொடங்கியது. மோசடி வழக்குகளையும் பொதுமக்கள் ஏளனத்தையும் எதிர்கொண்டார். கடன்களிலிருந்து மீள அடக்கமான பேச்சுரைகளில் ஈடுபட்டார். அவரது அருங்காட்சியகத்தில் அமெரிக்காவில் முதன்முறையாக ஓர் மீன் காட்சியகம் சேர்க்கப்பட்டது. மெழுகுச்சிலை பகுதியை விரிவாக்கினார். நியூயார்க்கில் இருந்தபோது சர்வமயவாதத்தைத் தழுவினார். நியூயார்க் நகரின் நான்காவது சர்வமய சமூகத்தில் உறுப்பினரானார்.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
29,838

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2525884" இருந்து மீள்விக்கப்பட்டது