உருவ வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''உருவ வழிபாடு''' (Idolatry) என்பது சிலை அல்லது படிமம் போன்ற இயற்பிய வடிவத்தின் ஊடாக இறைவனை வணங்குவது ஆகும். கிறித்தவம், இசுலாம், யூத மதம் போன்ற ஆபிரகாமிய மதங்களில் உருவங்களை வழிபடுவது, கடவுள் எனக் கருதிக்கொண்டு கடவுள் அல்லாத ஒன்றை வழிபடுவதைக் குறிக்கும். மேற்குறிப்பிட்ட மதங்களிலும், ஒரு கடவுட் கொள்கையுடைய பிற மதங்களிலும் உருவ வழிபாடு பொய்க் கடவுள்களை வணங்குவது எனக் கருதி அது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்து சமயம், புத்த சமயம், சமண சமயம் போன்ற இறைக் கொள்கையைப் பின்பற்றுவனவும், பின்பற்றாதனவுமான இந்தியச் சமயங்கள் உருவங்களை இறைவனாக அன்றி இறைவனுக்குக் குறியீடாகக் கொள்கின்றன அல்லது அவை ஆன்மீகக் கருத்துக்களின் குறியீடுகள் எனக் கொள்ளப்படுகின்றன அல்லது இறைத்தன்மையை உள்ளடக்கி இருக்கும் ஒன்றாகக் கருதுகின்றன. அத்துடன் அவை ஆன்மீகச் செயற்பாடுகளைக் குவியப்படுத்துவதற்கும் வணங்குவதற்குமான கருவியாகவும் தொழிற்படுகின்றன. பண்டைய எகிப்து, கிரீசு, உரோம், ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்காக்கள் ஆகியவற்றின் மரபுவழிச் சமயங்களில் சிலை அல்லது படிமங்களுக்குப் புனிதத்தன்மை கொடுப்பது பொதுவான வழக்காக இருந்துள்ளது. இவை அவர்களுக்கு வேறுபட்ட பொருள்களையும், முக்கியத்துவத்தையும் கொடுப்பனவாக இருந்தன.
 
சிலைகளை அல்லது படிமங்களை சமயக் கருத்துக்களின் வெளிப்பாடாகப் பயன்படுத்தல், அவற்றுக்குப் புனிதத்தன்மை கொடுத்தல், அவற்றை வணங்குதல் போன்றவற்றை எதிர்க்கும் கொள்கையை "உருவ எதிர்ப்புக் கொள்கை" (aniconism) என்பர். அதேவேளை வணக்கத்துக்கான சிலைகள், படிமங்கள் போன்றவற்றை அழிக்கும் கொள்கை "உருவ அழிப்புக் கொள்கை" (iconoclasm) எனப்படும். இக்கொள்கைகள் நீண்டகாலமாகவே உருவ வணக்கத்தை எதிர்ப்பவர்களுக்கும், உருவ வணக்கத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கும் இடையே வன்முறைகளுக்குக் காரணமாக இருந்துள்ளன. ஆபிரகாமிய மதங்களிடையே உருவ வழிபாடு என்பதன் வரைவிலக்கணம் சர்ச்சைக்கு உரிய ஒன்றாக விளங்கியுள்ளது. சில ஆபிரகாமிய மதத்தவர், கிறித்தவர்கள் சிலுவையைப் பயன்படுத்து முறையும், தேவாலயங்களில் மேரி மாதாவின் சிலையின் பயன்பாடும் உருவ வழிபாட்டின் ஒரு வடிவம் என்கின்றனர்.
 
[[பகுப்பு:சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/உருவ_வழிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது