உருவ வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
மதங்களின் வரலாற்றில் உருவ வழிபாடு குறித்த குற்றச்சாட்டுகளும், மறுப்புக்களும் நிரம்பியுள்ளன. இக்குற்றச்சாட்டுகள் சிலைகளுக்கும் படிமங்களுக்கும் இறைவன் தொடர்பான குறியீட்டுத் தன்மை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலானவை. மாற்றாக, உருவ வழிபாடு குறித்த விடயம் வேறு வேறான மதங்களுக்கு இடையிலும், ஒரே மதத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையிலும் கருத்து வேறுபாட்டுக்கான மூலமாக உள்ளது. தங்களுடைய மதச் செயற்பாடுகளில் உருவங்கள் பொருள் பொதிந்த அடையாளங்களாக இருப்பதாகக் கொள்ளும் சிலர், அடுத்தவருடைய மதத்தில் உருவவழிபாட்டை ஏற்றுக் கொள்ளாது இருப்பதையும் காணலாம்.
 
== வரலாற்றுக்கு முந்திய, தொல்பழங்கால நாகரிகங்கள் ==
வீனசு எனக்கருதப்படும் மிகப் பழைய சிற்றுருவங்கள் மேல் பழைய கற்காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. ஏஜிய கடற் பகுதியில் உள்ள தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் புதிய கற்காலத்துக்குரிய கிமு மூன்றாம், நாலாம் ஆயிரவாண்டுக் காலத்தின் சைக்கிளாடியப் பண்பாட்டுக்குரிய உருவங்கள் கிடைத்துள்ளன. கிமு மூன்றாம் ஆயிரவாண்டுக் காலத்தைச் சேர்ந்த வணங்கும் நிலையில் உள்ள உருவங்கள் சிந்துவெளி நாகரிகக் களங்களில் கிடைத்துள்ளன. இவற்றுக்கு மிகவும் முந்திய, உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் பாறை ஓவியங்கள், சிக்கல்தன்மை கொண்ட உருவங்களை மனிதர்கள் உருவாக்கியிருந்ததைக் காட்டுகின்றன.
 
 
[[பகுப்பு:சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/உருவ_வழிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது