இயற்பியலின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,789 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
==பண்டைய வரலாறு==
இயற்பியலின் கூறுகள் வடிவியலின் உதவியுடன் இயங்கக்கூடிய பிரிவுகளான வானவியல், இயந்திரவியல் மற்றும் ஒளியியல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. கணித கோட்பாடுகளின் மூலம் இயற்பியலை வரையறுப்பது [[ஹெலனிய காலம்|ஹெலனிய கால]] பண்டைய எழுத்தாளர்களான ஆர்க்கிமிடிஸ், [[தாலமி]] மற்றும் பாபிலோனியர்கள் காலத்திலிருந்தே தொடங்கப்பட்டது. பண்டைய மெய்யியல் அறிஞர்கள் தமது கருத்துக்கள் மூலம் இயற்பியலை விளக்க முற்பட்டனர். உதாரணத்திற்கு அரிஸ்டாட்டிலின் ''நான்கு வகையான காரணங்கள்''.
===பண்டைய கிரேக்கம்===
இயற்கையையும் அதன் கோட்பாடுகளையும் புரிந்துக் கொள்ள கிரேக்கர்கள் கிமு 650 முதலே முற்படுகின்றனர். சாக்கிரட்டீஸிற்கும் முன்பு வாழ்ந்த கிரேக்க மெய்யியல் அறிஞரான [[தேலேஸ்]] அறிவியலின் தந்தை எனக் கருதப்படுகிறார். ஏனெனில் இவர் மதக்கோட்பாடுகளையும், மூடநம்பிக்கைகளையும் மறுத்து ஒவ்வொரு நிகழ்விற்கும் பின் அறிவியல் காரணங்கள் உள்ளது என்று அறிவுறுத்தினார். தேலேஸ் கி.மு. 580 இல் சில அறிவியல் முடிவுகளையும் வெளியிட்டார். அதன்படி தண்ணீர்தான் அனைத்து பொருட்களுக்கும் அடிப்படைக்கூறு என்று கூறினார். உராயப்பட்ட பசை மற்றும் காந்தங்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையை பற்றியும் விளக்கினார். இவரே முதல் முறை பதிவு செய்யப்பட்ட அண்டவியல் கோட்பாடுகளை கூறியவர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2526556" இருந்து மீள்விக்கப்பட்டது