→பண்டைய கிரேக்கம்
No edit summary |
|||
வரிசை 5:
இயற்பியலின் கூறுகள் வடிவியலின் உதவியுடன் இயங்கக்கூடிய பிரிவுகளான வானவியல், இயந்திரவியல் மற்றும் ஒளியியல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. கணித கோட்பாடுகளின் மூலம் இயற்பியலை வரையறுப்பது [[ஹெலனிய காலம்|ஹெலனிய கால]] பண்டைய எழுத்தாளர்களான ஆர்க்கிமிடிஸ், [[தாலமி]] மற்றும் பாபிலோனியர்கள் காலத்திலிருந்தே தொடங்கப்பட்டது. பண்டைய மெய்யியல் அறிஞர்கள் தமது கருத்துக்கள் மூலம் இயற்பியலை விளக்க முற்பட்டனர். உதாரணத்திற்கு அரிஸ்டாட்டிலின் ''நான்கு வகையான காரணங்கள்''.
===பண்டைய கிரேக்கம்===
இயற்கையையும் அதன் கோட்பாடுகளையும் புரிந்துக் கொள்ள கிரேக்கர்கள் கிமு 650 முதலே முற்படுகின்றனர். சாக்கிரட்டீஸிற்கும் முன்பு வாழ்ந்த கிரேக்க மெய்யியல் அறிஞரான [[தேலேஸ்]] அறிவியலின் தந்தை எனக் கருதப்படுகிறார். ஏனெனில் இவர் மதக்கோட்பாடுகளையும், மூடநம்பிக்கைகளையும் மறுத்து ஒவ்வொரு நிகழ்விற்கும் பின் அறிவியல் காரணங்கள் உள்ளது என்று அறிவுறுத்தினார். தேலேஸ் கி.மு. 580 இல் சில அறிவியல் முடிவுகளையும் வெளியிட்டார். அதன்படி தண்ணீர்தான் அனைத்து பொருட்களுக்கும் அடிப்படைக்கூறு என்று கூறினார். உராயப்பட்ட பசை மற்றும் காந்தங்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையை பற்றியும் விளக்கினார். இவரே முதல் முறை பதிவு செய்யப்பட்ட அண்டவியல் கோட்பாடுகளை கூறியவர். [[அனாக்சிமாண்டர்]] என்னும் மெய்யியல் அறிஞர் அவரின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்காக நன்கு அறியப்படுபவர் ஆவார். இவர் தேலேஸின் கோட்பாடுகளிற்கு மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டார் . அதன்படி நீருக்கு பதிலாக எபிரான் எனும் பொருள் அனைத்துப் பொருட்களுக்கும் மூலக்கூறு என்று கூறினார். ஹெராக்லிடஸ் என்பவர் கிமு 500 வாக்கில் அடிப்படை இயற்பியல் விதி ஒன்றை உருவாக்கினார். அவ்விதியின் படி இந்த உலகத்தில் உள்ள எந்த ஒரு பொருளுமே நிலையான தன்மையில் இருப்பது இல்லை என்றும், அவை மாறிக்கொண்டே இருக்கும் என்றும் கூறினார். இவ்விதியினால் செவ்வியற்பியலின் அறிஞராக இவர் கருதப்படுகிறார். கி.மு 5,4, 3 ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்கத்தில் செவ்வியற்பியல் மெதுவாக வளரத் தொடங்கியது. பிளேட்டோவின் மாணவரான அரிஸ்டாட்டில் கி.மு 4 இல் மீவியற்பியலில் கோட்பாடுகளை வகுத்தார். இவர் வெளியிட்ட விதிகள் ''அரிஸ்டாட்டிலின் இயற்பியல்'' என்று வழங்கப்பட்டது. அதில் அவர் இயக்கங்கள் பற்றியும், ஈர்ப்பு விசைகள் குறித்தும் கூறியிருந்தார். அரிஸ்டாட்டில் ''ஈத்தர்'' எனும் ஒரு பொருளினால் உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களும் உருவாகி இருக்க வேண்டும் அல்லது பூமி, காற்று, வானம், நெருப்பு ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
|