ஐதராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44:
உதாரணமாக அமோனியாவின் pH மதிப்பு NH3 + H+ ⇌ NH+4 என்ற வினையின் காரணமாக 7 என்ற மதிப்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதன் விளைவாக ஐதரசம் நேர்மின் அயனியின் அடர்த்தி குறைந்து ஐதராக்சைடு அயனியின் அடர்த்தி அதிகரிக்கிறது. பல்வேறு தாங்கல் கரைசல்களில் கிட்டத்தட்ட நிலையான pOH மதிப்பைப் பராமரிக்க முடியும்.
 
நீரிய கரைசலில் <ref>{{cite journal|last=Marx|first=D.|author2=Chandra, A |author3=Tuckerman, M.E. |year=2010|title=Aqueous Basic Solutions: Hydroxide Solvation, Structural Diffusion, and Comparison to the Hydrated Proton|journal=Chem. Rev.|volume=110|issue=4|pages=2174–2216|doi=10.1021/cr900233f|pmid=20170203}}</ref> பிரான்சுடெட்டு-லோவ்ரி அமிலத்திலிருந்து ஒரு புரோட்டானை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதால் ஐதராக்சைடு அயனி பிரான்சுடெட்டு-லோவ்ரி நோக்கில் ஒரு காரமாகும். ஓரிணை எலக்ட்ரான்களை கொடையளிப்பதன் மூலம் இலூயிசு காரமாகவும் இதனால் செயல்பட முடியும். நீரிய கரைசலில் ஐதரசன் மற்றும் ஐதராக்சைடு இரண்டுமே ஆக்சிசன் மற்றும் ஐதரசன் அணுக்களுக்கு இடையில் ஐதரசன் பிணைப்பு மூலம் வலிமையாக கரைப்பானேற்றம் அடைகின்றன. உண்மையில் இங்கு திண்ம நிலையில் பை ஐதராக்சைடு அயனி H3O−2 அடையாளப்படுத்தப்படுகிறது.
 
கரைசலில் உள்ள ஐதராக்சைடு அயனி காற்றில் பட நேர்ந்தால் அது விரைவாக வளிமண்டல கார்பனீராக்சைடுடன் ஓர் அமிலமாக வினைபுரிந்து பைகார்பனேட்டு அயனியாக உருவாகிறது.
:OH<sup>−</sup> + CO<sub>2</sub> {{eqm}} {{chem|HCO|3|−}}
இவ்வினையின் சமநிலை மாறிலியை கரைந்துள்ள கார்பன் டை ஆக்சைடுடன் புரியும் வினை என்றோ அல்லது வளிமண்டல கார்பன் டை ஆக்சைடுடன் புரியும் வினை என்றோ குறிப்பிட்டுக் கூறலாம். நடுநிலை அல்லது அமில pH இல் வினையின் வேகம் மிகவும் குறைவு ஆகும்.
ஐதராக்சைடு அயனிகளைக் கொண்டுள்ள கரைசல்கள் கண்னாடியைத் தாக்குகின்றன. இங்கு கண்ணாடியில் உள்ள சிலிக்கேட்டு அமிலமாக செயற்படுகிறது. கார ஐதராக்சைடுகள் திண்மமாக இருந்தாலும் அவற்றை காற்று புகா நெகிழிப் புட்டிகளில் சேமிக்க வேண்டும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐதராக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது