கிரிசு எவர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
இவர் 34 கிராண்ட் சிலாம் இறுதி ஆட்டங்களை எட்டியுள்ளார், இது எந்த தொழில் ஆட்டக்காரரும் செய்யாத சாதனையாகும். கிராண்ட் சிலாமில்+ முதல் இரு சுற்றுகளில் இவர் தோற்றதில்லை, மூன்றாவது சுற்றில் மட்டும் இரு முறை தோற்றுள்ளார். [[பிரெஞ்சு ஓப்பன்|பிரெஞ்சு ஓப்பனில்]] ஏழு முறை கோப்பையை பெற்றதும் ஆறு முறை [[யூ.எசு. ஓப்பன்|யூஎசு ஓப்பனில்]] கோப்பையை பெற்றதும் சாதனையாகும் .(யூஎசு ஓப்பனில் [[செரீனா வில்லியம்ஸ்|சரினா வில்லியம்சும்]] ஆறு முறை கோப்பையை பெற்றுள்ளார்).
 
எவர்ட் 89.97% (1309-146) தனிநபர் போட்டிகளில் வென்றுள்ளார். களிமண் தளத்தில் அவரின் வெற்றி சதவீதம் 94.55% (382-22) இதுவும் ஒரு முறியடிக்கப்படாத சாதனையாகும். இவர் பெண்கள் டென்னிசு அமைப்பின் தலைவராக பதினொரு ஆண்டுக்கள் பணியாற்றினார். எவர்ட்
பயிற்சியாளராகவும் பணியாற்றினார், தற்போது இஎசுபிஎன் தொலைக்காட்சியில் டென்னிசுக்கான வல்லுநராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார்.
 
==வாழ்க்கை==
1951இல் புளோரிடாவிலுள்ள [[போர்ட் லாடர்டேல்|போர்ட் லாடர்டேலிலில்]] கோலெட்டேவுக்கும் சிம்மி எவர்ட்டுக்கும் பிறந்த எவர்ட் தீவிரமான கத்தோலிக நம்பிக்கையுள்ள குடும்பத்தால் வளர்க்கப்பட்டார். 1973இல் இவர் போர்ட் லாடர்டேலிலில் உள்ள புனித தாமசு அக்குயனியசு உயர்நிலைப்பள்ளியில் பட்டம் பெற்றார். சிம்மி எவர்ட் தொழில்முறை டென்னிசு பயிற்சியாளர் ஆவார். டென்னிசே அவர் குடும்பத்தின் வாழ்க்கையாக இருந்தது. கிரசு எவர்ட்டும் அவரின் சகோதரி இச்சேன்னியும் தொழில் முறை டென்னிசு ஆட்டக்காரர்கள் ஆனார்கள், அவர்களின் சகோதரர் இச்சான் அலபாமா பல்கலைக்கழகத்திற்காகவும் பின்பு வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்திற்காகவும் விளையாடினார். மற்றொரு சகோதரர் இட்ரூ [[ஆபர்ன் பல்கலைக்கழகம்|ஆபர்ன் பல்கலைக்கழகத்திற்காக]] விளையாடினார், அவர்களின் இளைய சகோதரி கிளேர் தென் மெத்தோடிசுட் தேவாலாய பல்கலைக்கழகத்திற்காக விளையாடினார். இந்த ஐவரும் மதிப்புமிக்க இளையோருக்கான புளோரிடா மாநிலத்தின் ஆரஞ்சு பவுல் பட்டங்களை வென்றார்கள்.
 
முதல் கிராண்ட் சிலாம் கோப்பையை வெல்வதற்கு முன் புரிடன் பேசன்சு என்ற விளையாட்டு ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்துடன் உடன்பாடு
செய்துகொண்டார். அந்நிறுவனத்தின் தலைவர் தன் ஒருவருட வயதுள்ள பந்தயகுதிரைக்கு இவர் பெயரை சூட்டி சிறப்பு செய்தார். அந்த பந்தயக்குதிரை
1974இல் நான்கு வயதுக்கு குறைவான பெண் பந்தயக் குதிரைகளுக்கான முப்போட்டிகளில் வென்றது.
 
1970இல் எவர்ட் சிறந்த டென்னிசு வீரரான [[ஜிம்மி கான்னர்ஸ்|சிம்மி கானர்சுடன்]] காதல் வயப்பட்டு இருந்தது 1974இல் இருவரும் [[விம்பிள்டன் கோப்பை]]யை பெற்றதால் மக்களின் கவனத்தை பெற்றது. எவர்ட்டும் சிம்மியும் சிலமுறை இணைந்து இரட்டையர் கலப்பு ஆட்டங்களை ஆடினார்கள். 1974இல் அவர்கள் இணை [[யூ.எசு. ஓப்பன்|யூஎசு ஓப்பனில்]] இரண்டாவது இடத்தை பிடித்தது.
 
 
 
 
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கிரிசு_எவர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது