"இயூரோன் ஏரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,750 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *விரிவாக்கம்*
(துவக்கம் - வேங்கைத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது)
 
(→‎top: *விரிவாக்கம்*)
'''இயூரோன் ஏரி''' (''Lake Huron'') [[வட அமெரிக்கா]]வின் ஐந்து [[அமெரிக்கப் பேரேரிகள்|பேரேரிகளில்]] ஒன்றாகும் . [[நீரியல்|நீரியலின்படி]], இது [[மிச்சிகன்-ஹுரோன் ஏரி]]யின் கிழக்குப் பகுதியாகும்; இதன் மேற்கிலுள்ள மிச்சிகன் ஏரியுடன் 5-மைல்-அகலமுள்ள (8.0 கிமீ), 20-பதாம்-ஆழமுள்ள (120 அடி; 37 மீ) [[மக்கினாக் நீரிணை]]யால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியின் வடக்கிலும் கிழக்கிலும் [[கனடா|கனடாவின்]] [[ஒன்றாரியோ]] மாநிலமும் தெற்கிலும் மேற்கிலும் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவின்]] [[மிச்சிகன்]] மாநிலமும் உள்ளது. இந்த ஏரிக்கு துவக்க கால பிரான்சிய நாடுகாண் தேடலறிஞர்கள் இப்பகுதியில் வசித்து வந்த இயூரோன் மக்கள் பெயரைச் சூட்டினர்.
 
இந்த ஏரிப்பகுதியில் கிடைத்த சான்றுகளை வைத்தே இயூரோன் உறைபனிப்பரவலுக்கு அவ்வாறு பெயர் சூட்டப்பட்டது. ஏரியின் வடக்குப் பகுதிகளில் வடக்குக் கால்வாயும் ஜியார்ஜியன் விரிகுடாவும் அடங்கும். தென்மேற்கே ஏரிக்கு எதிரே சாகினா விரிகுடா உள்ளது. புனித மேரி ஆறு முதன்மையான நீர் வரத்து ஆகும்; முதன்மேயானமுதன்மையான வெளியேற்றுகை புனித கிளையர் ஆறாகும்.
==புவியியல்==
மேற்புரப்பரப்பளவில் இயூரோன் ஏரி பேரேரிகளில் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். இதன் மேற்பரப்பு 23,007 சதுர மைல்கள் (59,590 ச.கிமீ) ஆகும்; இதில் 9,103 சதுர மைல்கள் (23,580 கிமீ<sup>2</sup>) மிச்சிகனிலும் 13,904 சதுர மைல்கள் (36,010 கிமீ <sup>2</sup>) ஒன்றாரியோவிலும் உள்ளன. புவியின் [[பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்|மூன்றாவது-மிகப்பெரிய நன்னீர் ஏரியாக]] ([[காசுப்பியன் கடல்]] ஏரியாகக் கருதப்பட்டால் நான்காவது மிகப்பெரிய ஏரியாக) உள்ளது.<ref name="EPAphysical">{{cite web |url=http://www.epa.gov/greatlakes/atlas/gl-fact1.html |title=Great Lakes Factsheet No. 1 |accessdate=March 6, 2014 |date=June 25, 2012 |work= |publisher=U.S. Environmental Protection Agency}}</ref> ஆனால் கொள்ளளவின்படி இயூரோன் ஏரி பேரேரிகளில் மூன்றாவதாகும். இதை விட [[மிச்சிகன் ஏரி]]யும் [[சுப்பீரியர் ஏரி]]யும் பெரியன.<ref name="Annin2006">{{cite book|first=Peter |last=Annin|title=The Great Lakes Water Wars|url=https://books.google.com/books?id=VzMeZHaLP_gC&pg=PA15|year=2006|publisher=[[Island Press]]|isbn=978-1-55963-087-0|page=15}}</ref> தாழ் நீர்நிலையை அளவிடும்போது ஏரியின் கொள்ளளவு {{convert|850|mi3}} ஆகும்; தீவுகளினுடையதும் சேர்த்து கரையோர நீளம் {{convert|3,827|mi|km|abbr=on}}.<ref name="EPAphysical"/>
 
இயூரோன் ஏரியின் மேற்பரப்பு [[கடல் மட்டம்|கடல் மட்டத்திலிருந்து]] 577 அடி (176 மீ) உயரத்தில் உள்ளது.<ref name=EPAphysical/> ஏரியின் சராசரி ஆழம் 32 [[பதொம் (அலகு)|பதொம்]] 3 அடியாகவும் (195 அடி (59 மீ)), மீயுயர் ஆழம் 125 பதொம்களாகவும் (750 அடி (230மீ)) உள்ளது.<ref name=EPAphysical/> ஏரியின் அகலம் 206 மைல்கள் (332 கிமீ; 179 க.மைல்) மற்றும் அதன் மிகப்பெரும் அகலம் 183 மைல்கள் (295 கிமீ; 159 க.மைல்கள்).<ref name=EPAphysical/>
 
இயூரோன் ஏரியை அடுத்த 10,000 மக்கள்தொகைக்கும் கூடுதலான நகரங்கள் கனடாவில் [[சார்னியா]]வும் சௌகீன் சோர்சும் ஐக்கிய அமெரிக்காவில் பே சிட்டி, போர்ட் இயூரோன், அல்பெனா ஆகியவையும் ஆகும். இதில் இயூரோன் ஏரிக்கரையில் அமைந்துள்ள நகரங்களில் மிகப்பெரியது சார்னியா ஆகும்.
 
இயூரோன் ஏரியிலிருந்து வடகிழக்கில் கனடாவின் ஒன்றாரியோவினுள் நீட்டிக்கொண்டிருக்கும் விரிகுடா ஜியார்ஜியன் விரிகுடா என அழைக்கப்படுகின்றது. இயூரோன் ஏரியின் முதன்மை நீர் நிலையிலிருந்து ஜியார்ஜியன் விரிகுடாவையும் வடக்குக் கால்வாயையும் பிரிக்கும் ''மனிட்டூலின் தீவு'' இந்த ஏரியின் குறிப்பிடத்தக்க கூறாக உள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய ஏரித்தீவு ஆகும். <ref>{{cite web |url=http://www.cbc.ca/sevenwonders/wonder_manitoulin_island.html |website=CBC.ca |title=Seven Wonders of Canada-Manitoulin Island, Ontario |accessdate=8 October 2016}}</ref> ஜியார்ஜியன் விரிகுடாவிலுள்ள முதன்மையான மையங்கள் ஓவென் சவுண்டு, [[வசாகா கடற்கரை, ஒன்ராறியோ|வசாகா கடற்கரை]], காலிங்வுட், மிட்லாந்து, பெனெடங்குசென், செவெர்ன் துறைமுகம் மற்றும் பாரி சவுண்டு.
 
இயூரோன் ஏரியின் தென்மேற்கில் மிச்சிகன் மாநிலத்தினுள் நீட்டிக்கொண்டிருக்கும் சிறிய விரிகுடா ''சாகினா விரிகுடா'' எனப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2527313" இருந்து மீள்விக்கப்பட்டது