இயேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி reFill உடன் 5 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 39:
எபிரேய வழக்கப்படி, அரசர் மற்றும் இறைவாக்கினர் மக்களை வழிநடத்துகின்ற தலைமைப் பணியை ஏற்கும்போது அவர்கள் தலையில் எண்ணெய் வார்த்து, அவர்களிடம் அப்பணிப்பொறுப்பு ஒப்படைக்கப்படும். இயேசு கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, கடவுளின் வல்லமையால் மனித குலத்தை மீட்டு அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பைப் பெற்றார் என்னும் அடிப்படையில் ''கிறிஸ்து'' ([[மெசியா]], திருப்பொழிவு பெற்றவர்) என அழைக்கப்படுகிறார். அவரை மெசியா என ஏற்று வணங்குவோர் அவர் பெயரால் ''கிறிஸ்தவர்'' (''கிறித்தவர்'') என அறியப்பெறுகின்றனர் <small>(திருத்தூதர் பணிகள் 11:26)</small>.
 
== நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின்நற்செய்திகளின்படி வாழ்க்கைச் சுருக்கம் ==
=== விவிலியம் தரும் ஆதாரம் ===
{{Gospel Jesus|expanded=all}}
வரிசை 75:
# இயேசுவின் வரலாற்றையும் போதனையையும் எடுத்துக் கூறுகின்ற [[நற்செய்தி நூல்கள்]] எதற்காக எழுதப்பட்டன என்பதை [[யோவான் நற்செய்தி (நூல்)|யோவான் நற்செய்தியாளர்]] தம் நூலின் இறுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன" <sup>(யோவான் 20:31)</sup>.
 
=== நற்செய்திகளின்படி இயேசுவின் குல மரபும் உறவுகளும் ===
[[படிமம்:Christ pantocrator daphne1090-1100.jpg|thumb|200px|left|<center>போதனை வழங்கும் ஆண்டவராக இயேசுவைக் காட்டும் உருவப்படம். கலை: பதிப்புக்கல் பாணி. காலம்: 6ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஏத்தென்சு.</center>]]
இயேசுவின் தாயாரான மரியாவின் கணவர் யோசேப்பு என்பவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார் <small>(காண்க: மத்தேயு 1:1-16; லூக்கா 3:23-38)</small>. மத்தேயுவும் லூக்காவும் தருகின்ற பட்டியல்படி, இயேசு ஆபிரகாம் மற்றும் தாவீது அரசன் வழி வருபராவார். இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கு பின்னர் குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. இயேசு பகிரங்க வாழ்க்கையை, அதாவது போதிக்கும் பணியை ஆரம்பிக்கும் முன்னரே யோசேப்பு இறந்திருக்க கூடும் என ஊகிக்கப்படுகிறது. இது இயேசு சிலுவையில் தொங்கும் போது தம் தாயைக் கவனித்துக்கொள்ளுமாறு அவர்தம் அன்புச்சீடருக்குப் பணித்ததிலிருந்து தெளிவாகிறது <small>(யோவான் 19:25-27)</small>.
வரிசை 87:
புதிய ஏற்பாட்டில் யோவானின் தாயாகிய எலிசபெத்து மரியாவின் உறவினர் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கிடையே நிலவிய உறவு முறை யாதென்று குறிப்பிடப்படவில்லை.
 
=== விவிலியத்தின்படி இயேசுவின் பிறப்பு பற்றிய செய்திகள் ===
[[படிமம்:Gerard van Honthorst 002.jpg|thumbnail|250px|left|<center>இடையர்கள் குழந்தை இயேசுவை வணங்குகின்றனர். ஓவியர்: கெரார்டு ஃபான் ஃகோன்ட்கோர்ஸ்ட். ஓலாந்து. காலம்: 17ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: பிரான்சு.</center>]]
[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] நற்செய்திகளில் கூறியுள்ளபடி இயேசு யூதேயாவிலுள்ள பெத்லகேமில் கன்னிமரியாவிடமிருந்து கடவுளின் வல்லமையாகிய தூய ஆவியினால் பிறந்தார். லூக்கா நற்செய்தியின்படி [[கபிரியேல் வானதூதர்]] மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" <sup>(லூக்கா 1:28)</sup> என்று வாழ்த்துக் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அச்சமுற்றுக் கலங்கிய மரியாவைப் பார்த்து, கபிரியேல் வானதூதர், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" <sup>லூக்கா 1:26-31)</sup> என்றுரைத்தார். இந்நிகழ்வு ''கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு'' அல்லது ''மங்கள வார்த்தையுரைப்பு'' (Annunciation) என நினைவு கூரப்பட்டு மார்ச்சு மாதம் 25ஆம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இயேசு மரியாவின் வயிற்றில் கருவானார் என்று கணக்கிட்டு ஒன்பது மாதங்கள் கழிந்து, டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கிறித்தவர் கொண்டாடுகின்றனர்.
வரிசை 97:
இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்குமிடையே இயேசு 12 வயதில் எருசலேம் கோவிலுக்குச் சென்ற நிகழ்வுமட்டுமே விவிலியத்தில் (லூக்கா நற்செய்தியில்) குறிப்பிடப்பட்டுள்ளது <small>(காண்க: லூக்கா 2:41-52)</small>. இடைப்பட்ட காலத்தில் இயேசு என்ன செய்தார் என்பது விவிலியத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படாத சில நற்செய்திகளில் கற்பனைக் கதைபோல் மட்டுமே கூறப்பட்டுள்ளது (காண்க: [[இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு]])
 
=== இயேசுவின் திருமுழுக்கும் சோதனையும் பற்றிய நற்செய்தித் தகவல்கள் ===
[[படிமம்:Ary Scheffer - The Temptation of Christ (1854).jpg|thumbnail|250px|right|<center>இயேசு அலகையால் சோதிக்கப்படுதல். ஓவியர்: ஏரி ஷெஃப்பர். ஆண்டு: 1854).</center>]]
 
வரிசை 111:
திருமுழுக்குப் பெற்ற பின்னர் இயேசு பாலைநிலத்துக்குச் சென்று 40 நாள்கள் நோன்பிருந்தார். அப்போது அலகை அவரை மூன்று முறை சோதித்தது. மூன்று முறையும் இயேசு வென்றார். பின்னர் இயேசு பாலைநிலத்தை விட்டகன்று, மக்களுக்கு "இறையரசு" பற்றிய நற்செய்தியை அறிவிக்கலானார். தம்மோடு இருக்கவும் மக்களுக்கு இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு தமக்கென சீடர்களைத் தெரிந்துகொண்டார் <small>(காண்க: மத்தேயு 4:12-22; மாற்கு 1:14-20; லூக்கா 4:14-5:11)</small>.
 
=== நற்செய்திகளில் இயேசுவின் பொது வாழ்க்கை அல்லது இறையரசுப் பணி ===
 
இயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார். அப்பணியைக் கடவுளே தம்மிடம் ஒப்படைத்ததையும் அறிந்தார். இயேசு உண்மையிலேயே [[மகனாகிய கடவுள்|கடவுளின் மகன்]] என்னும் உண்மையும் அவர் பெற்ற திருமுழுக்கின்போது வெளிப்படுத்தப்பட்டது.
வரிசை 130:
[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] அடங்கியுள்ள நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவை ''[[மெசியா]], [[மானிட மகன்]], [[ஆண்டவர்]], [[இறைவாக்கினர்]], [[திரித்துவம்#இறைமகன்|இறைமகன்]]'' என்னும் [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்|பல பெயர்களால்]] அழைக்கின்றன. இயேசு தம்மைப் பற்றிப் பேசும்போது ''[[மானிட மகன்]]'' என்னும் பெயரையே கையாளுகின்றார்.
 
=== இயேசு அறிவித்த இறையாட்சி (விண்ணரசு) பற்றி நற்செய்தி நூல்கள்அறிவிப்பு ===
 
நற்செய்தி நூல்கள்படி, இயேசு மக்களுக்கு அறிவித்த மையச் செய்தி [[இறையாட்சி]] அல்லது [[விண்ணரசு]] என்பதாகும். நற்செய்தி நூல்களில் எந்த ஓர் இடத்திலும் இயேசு ''இறையாட்சி'' என்றால் இதுதான் என்று வரையறுத்துக் கூறவில்லை. ஆனால், இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது என்பதை அவர் பல சிறு கதைகள் அல்லது [[இயேசுவின் உவமைகள்|உவமைகள்]] வழியாக எடுத்துக் கூறினார். இறையாட்சியில் பங்கேற்க விரும்புவோர் எவ்வழியில் நடக்க வேண்டும் என்பதைக் கற்பித்தார். கண்பார்வை இழந்தோருக்குப் பார்வை அளித்தும், முடக்குவாதமுற்றவருக்கு நடக்கும் திறமளித்தும், தொழுநோயாளருக்கும் தீய ஆவியால் அவதியுற்றோருக்கும் நலமளித்தும் இயேசு பல [[இயேசுவின் புதுமைகள்|புதுமைகள்]] மற்றும் அரும்செயல்களைப் புரிந்தார். இவ்வாறு மக்களுக்கு நலமளித்த இயேசு அவர்களின் பசியைப் போக்க அற்புதமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தி நான்கு நற்செய்தி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது <small>(காண்க: மத்தேயு 14:13-21; மாற்கு 6:30-44; லூக்கா 9:10-17; யோவான் 6:1-14)</small>.
வரிசை 144:
இயேசு பொதுமக்களுக்கு போதித்தார் எனினும் தம்மோடு நெருங்கிய உறவுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் [[திருத்தூதர்]]களுக்கும் தம் போதனையின் உள்கிடக்கையை விளக்கிக் கூறினார் (காண்க: ''விதைப்பவர் உவமை'' - <small>மத்தேயு 13:1-9</small>; அந்த உவமைக்கு இயேசு விளக்கம் தருதல் - <small>மத்தேயு 13:18-24</small>) இயேசு கூடுதலாகப் போதனை செய்த இடங்கள் கலிலேயா (இன்றைய வட [[இசுரேல்]]) மற்றும் பெரேயா (இன்றைய மேற்கு [[யோர்தான்]]) என்பனவாகும்.
 
=== இயேசு வழங்கிய மலைப்பொழிவு: மத்தேயு, லூக்கா ===
{{Main|மலைப்பொழிவு}}
[[படிமம்:Bloch-SermonOnTheMount.jpg|left|thumb|250px|இயேசு ''மலைப்பொழிவு'' ஆற்றுகிறார்.]]
வரிசை 168:
<br />12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்."
 
=== நற்செய்தி நுல்களின்படி இயேசு வழங்கிய உவமைகள் ===
{{Main|இயேசுவின் உவமைகள்}}
இயேசு மக்களுக்குப் பெரும்பாலும் சிறு கதைகள் அல்லது [[இயேசுவின் உவமைகள்|உவமைகள்]] வழி போதித்தார். அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒரு சில உவமைகள் இதோ:
வரிசை 181:
இயேசு பல உவமைகள் வழியாக இறையாட்சி பற்றிய உண்மைகளை மக்களுக்கு அறிவித்தார்; இறையாட்சியில் பங்குபெற மக்கள் முன்வருமாறு அழைப்பு விடுத்தார்; இறையாட்சியின் பண்புகளை விளக்கினார். குறிப்பாக, எல்லா மக்களும் கடவுள்மீது நம்பிக்கைகொண்டு, கடவுளையும் மனிதரையும் அன்புசெய்து வாழ்ந்திட வேண்டும் என்று இயேசு போதித்தார். பகைவரையும் மன்னிக்க வேண்டும் என்பது அவர் வழங்கிய முக்கிய போதனைகளில் ஒன்று. தம்மைத் துன்புறுத்தி, சிலுவையில் அறைந்த பகைவரை அவரே மனதார மன்னித்தார்.
 
=== நற்செய்தி நூல்களில் இயேசுவின் போதனை மொழிகள் ===
 
* "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" <sup>(மத்தேயு 11:28)</sup>.
வரிசை 192:
* "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" <sup>(லூக்கா 23:34)</sup>.
 
=== இயேசு எதிரிகளோடுஎதிராளிகளோடு மோதல் ===
 
இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் தங்கள் பாவ வழிகளிலிருந்து விலகி மன மாற்றமடைந்து இறையாட்சியை நம்பி ஏற்க வேண்டும் என்று விடுத்த அழைப்பைப் பொதுமக்கள் விருப்போடு ஏற்றனர். ஆனால் யூத சமயத் தலைவர்கள் பலர் இயேசு வழங்கிய செய்தியை ஏற்க முன்வரவில்லை. அச்சமயத் தலைவர்கள் ''பரிசேயர்'', ''சதுசேயர்'', ''மறைநூல் அறிஞர்'', ''தீவிரவாதிகள்'' என்னும் பல பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.
வரிசை 202:
[[படிமம்:First century Iudaea province.gif|thumbnail|250px|left|<center>இயேசுவின் நாள்களில் யூதேயா மற்றும் கலிலேயா</center>]]
 
=== இயேசு ஏழைகளோடும் பாவிகளோடும் உணவருந்தினார்உணவருந்தல் ===
 
அக்கால யூத சமுதாயத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு நிலவியது. சமயச் சடங்குகளில் யார் பங்கேற்கலாம், யாரோடு உணவு அருந்தலாம், யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து தீட்டு பற்றிய சட்டங்கள் பல இருந்தன. அச்சட்டங்களை இயேசு வேண்டுமென்றே மீறினார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் வருகிறது. அவரைப் பொறுத்தமட்டில் மக்களிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. எல்லா மனிதரும் ஒரே கடவுளின் பிள்ளைகளே. எனவேதான் அன்றைய சமுதாயம் பாவிகள் என்றும் ஒதுக்கப்பட்டவர் என்றும் தீட்டுப்பட்டவர் என்றும் கருதிய மக்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டார். அன்றைய தூய்மைச் சட்டங்களை மீறினார். இதைக் கண்ட இயேசுவின் எதிரிகள் அவர் "வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" <sup>(மத்தேயு 11:19)</sup> என்று இழித்துரைத்தார்கள்.
வரிசை 208:
ஏழைகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் இயேசு நெருங்கிப் பழகியது அம்மக்களது வாழ்க்கையில் அதிசயமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. ஆனால் இயேசுவின் எதிரிகள் அவரிடம் குற்றம் கண்டனர். தாழ்ந்த தொழிலாகக் கருதப்பட்ட வரிதண்டும் தொழிலைச் செய்தவர் மத்தேயு. அவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்ட இயேசு அவரைப் பார்த்து, "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு மத்தேயு வீட்டில் இயேசு விருந்து அருந்தினார். பரிசேயர்கள் இதைக் கண்டனர். உடனே அவர்கள் இயேசுவின் சீடரிடம், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" <sup>(மத்தேயு 9:11)</sup> என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு இயேசு அளித்த பதில் அவர் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இயேசு கூறியது: "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்<sup> (மத்தேயு 9:12-13)</sup>.
 
=== இயேசு துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையுண்டு இறத்தல் ===
{{Main|இயேசுவின் சாவு}}
நற்செய்தி நூல்கள்படி, இயேசு தம் பணிக்கால இறுதியில், எருசலேம் நகரைச் சென்றடைந்தார். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார் <small>(காண்க: மத்தேயு 21:1-11; யோவான் 12:12-19)</small>. அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார் <small>(காண்க: மத்தேயு 21:12-17)</small>.
வரிசை 261:
14) இயேசு சிலுவையில் இறந்த சரியான நேரம் குறித்து வேறுபட்ட கருத்துகள் உள்ளன. பெரும்பான்மையோர் இயேசு பிற்பகல் 3 அளவில் இறந்தார் என்பர். யூதர்களின் நிசான் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அதாவது யூதர் பாஸ்கா விழாக் கொண்டாடுவதற்கு முந்திய நாள் இயேசு இறந்தார் என்பது பொதுவான கருத்து. இது பற்றி மாற்றுக்கருத்தும் உள்ளது.
 
=== இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படல் பற்றிய நற்செய்தித் தகவல் ===
 
சிலுவையில் தொங்கிய இயேசு இறந்ததும், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் பிலாத்துவை அணுகி, இயேசுவின் உடலைக் கேட்டார் என்றும், சிலுவையினின்று இறக்கிய உடலை மெல்லிய துணியால் சுற்றிப் பொதிந்து, அதற்கு முன்பு யாரையும் அடக்கம் செய்திராத ஒரு புதிய கல்லறையில் அந்த உடலை வைத்தார்கள் என்றும் லூக்கா நற்செய்தி கூறுகிறது <small>(காண்க: லூக்கா 23:50-53)</small>. அவ்வாறே மாற்குவும் கூறுகிறார் <small>(காண்க: மாற்கு 15:42-46)</small>. அக்கல்லறையை அரிமத்தியா யோசேப்பு தமக்கென வைத்திருந்தார் என்று மத்தேயு நற்செய்தி கூறுகிறது <small>(காண்க: மத்தேயு 27:60)</small>. இயேசுவை அடக்கம் செய்ததில் [[நிக்கதேம்]] என்பவரும் பங்கேற்றதை யோவான் குறிப்பிடுகிறார்: "முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்"<sup>(யோவான் 19:39)</sup>.
வரிசை 267:
இயேசு இறந்த நாள் பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாக இருந்ததாலும் அக்கல்லறை அருகின் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள் <small>(காண்க: யோவான் 19:42)</small>. கல்லறையின் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனதாக மத்தேயு கூடுதல் தகவல் தருகிறார் <small>(காண்க: மத்தேயு 27:60)</small>. இயேசுவின் அடக்கம் ஆழ்ந்த [[கிறித்தவ இறையியல்|இறையியல்]] பொருள் கொண்டதாக தூய பவுல் விளக்குவார்.
 
=== நற்செய்திகள்படி இயேசு உயிர்பெற்றெழுந்து விண்ணேற்றம் அடைதல் ===
''முதன்மைக் கட்டுரை: [[{{Main|இயேசுவின் உயிர்த்தெழுதல்]]''}}
 
''முதன்மைக் கட்டுரை: [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]]''
[[படிமம்:Grunewald - christ.jpg|thumb|left|200px|<center>''இயேசு உயிர்பெற்றெழுதல்'' <br />16வது நூற்றாண்டு ஓவியம்</center>]]
 
வரி 296 ⟶ 295:
இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்கு பிறகு [[இயேசுவின் விண்ணேற்றம்]] நிகழ்ந்தது.
 
=== உயிர்பெற்றெழுந்த இயேசு தம்பின் சீடர்களுக்குத் தோன்றுதல் பற்றிய புதிய ஏற்பாட்டுச் செய்தி ===
 
இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையாய் இருந்ததும், [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|இயேசு உயிர்பெற்றெழுந்ததும்]] அவர் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். இயேசு தம் சீடருக்குப் பல முறை காட்சியளித்ததாக நற்செய்தி நூல்களும் திருத்தூதர் பணிகள் நூலும் தெரிவிக்கின்றன.
வரி 343 ⟶ 342:
 
== இயேசு பற்றிய பிற விளக்கங்கள் ==
{{Main|இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு}}
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலக வரலாற்றில் பெரும் தாக்கம் கொணர்ந்தவர் இயேசு. எனவே, அவருடைய வாழ்க்கை, போதனை, சாவு, உயிர்த்தெழுதல் பற்றி, [[நற்செய்தி]] நூல்கள் தருகின்ற செய்திகளைத் தவிர வேறு தகவல்கள் உளவா என்ற கேள்விக்குப் பதில் தரும் விதத்தில் பல நூல்கள் தோன்றியதில் வியப்பில்லை. குறிப்பாக, இயேசு தம் 12 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தார் என்ற மர்மத்தை விளக்கும் வகையிலும், அவர் உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா என்பதைத் தெரிந்துகொள்ளவும் நடந்த முயற்சிகள் விவிலிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
 
மேலும், இயேசு வரலாற்று மனிதரா என்னும் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையிலும் இயேசுவின் போதனை எத்தகையது என்பதை விளக்கும் வகையிலும் சில சிந்தனையாளர்கள் விமர்சித்துள்ளார்கள். இயேசு வாழ்ந்த காலத்தில் யூத சமயப் பிரிவினரான பரிசேயர், சதுசேயர் போன்றவர்கள் இயேசுவின் போதனையில் குறைகண்டார்கள். அதன் பிறகு, கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த செல்சுஸ் (Celsus), 3ஆம் நூற்றாண்டவரான போர்ஃபிரி (Porphyry) போன்றோர் இயேசு பற்றி விமர்சித்தார்கள். பகுத்தறிவுவாதக் கொள்கை அடிப்படையில் [[பிரீட்ரிக் நீட்சே]], [[பெர்ட்ரண்டு ரசல்]] முதலியோர் இயேசுவையும் அவருடைய போதனைகளையும் விமர்சித்துள்ளனர். "இயேசு பற்றிய விமர்சனம்" ஒருபக்கம் தொடரவே, அதற்குப் பதில் வழங்கும் முயற்சியும் நடந்துவருகிறது. இம்முயற்சி [[கிறித்தவ தன்விளக்கம்]] என்று அழைக்கப்படுகிறது.
 
{{Main|இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு}}
 
== சமயக் கருத்துக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயேசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது