9,564
தொகுப்புகள்
அடையாளம்: 2017 source edit |
அடையாளம்: 2017 source edit |
||
இவருடைய தந்தையார் ''ஹனி'' இரண்டாம் மர்வானின் படையில் ஒரு போர்வீரனாக இருந்தார். அபு நுவாஸ் இவரைக் கண்டதில்லை. பாரசீகப் பெண்ணான இவரது |தாயார் ''கோல்பான்'' ஒரு நெசவாளராகப் பணி புரிந்து வந்தார். அபு நுவாசின் வரலாறுகள், அவரது பிறந்த ஆண்டு குறித்து, 747 க்கும், 762 க்கும் இடையில் வேறுபடுகின்றன. சிலர் இவர் [[டமாஸ்கஸ்]] நகரில் பிறந்ததாகக் கூறுகின்றனர். வேறு சிலர் இவர் பிறந்த இடம் [[பஸ்ரா]] என்று கூற இன்னும் சிலர் [[அஹ்வாஸ்]] என்கின்றனர். இவருக்கு இடப்பட்ட பெயர் ''அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி''. அபு நுவாஸ் என்பது இவரது பட்டப் பெயர். இப் பெயர் ''குடுமியின் தந்தை'' என்னும் பொருள் கொண்டது. இவரது தலையிலிருந்து தோள்வரை தொங்கிய பக்கக் குடுமிகளைக் குறித்தே இப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.
==நாடு கடத்தலும் சிறைத் தண்டனையும்==
அபு நுவாஸ், காலிப் வம்சத்தைச் சேர்ந்த கரூன்- அல்- ரிசாத்தினால் வீழ்த்தப்பட்ட பாரசீக அரசியல் குடும்பமான பர்மாக்கிஸ் குறித்து வாழ்த்தும் வகையில் எழுதிய பாடலுக்காக சில காலம் எகிப்துக்கு தப்பி ஓடினார். கரூன்- அல்- ரிசாத்தின் மரணத்தின் பின் 809 இல் [[பகுதாது|பக்தாத்]] திரும்பினார். அடுத்து பதவிக்கு வந்த முகமத் அல் அமீன் என்பவர் கரூன்- அல்- ரிசாத்தின் மகன். இவர் அபு நுவாஸின் முன்னாள் மாணவர். இவரது காலத்தில் (809-813)தான் அபு நுவாஸ் அதிக கவிதைகள் எழுதியதாக கருதப்படுகின்றது.
==மேற்கோள்கள்==
|