"கடமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கடமை''' என்பது, பொதுவாக அல்லது குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் ஏற்படும்போது செய்வதாக ஏற்றுக்கொள்கின்ற அல்லது செவதற்குசெய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம் ஆகும். ஒருவரை ஒருவர் மதிக்கின்ற ஒரு பண்பாட்டில், கடமைகடமையானது, நன்னெறி அல்லது ஒழுக்க முறைமையிலிருந்து உருவாகலாம். பல கடமைகள் சட்டத்தினால் ஏற்படுத்தப்படுகின்றன. சட்டப்படியான கடமைகளில் இருந்து தவறுவதற்குத் தண்டனைகளும் விதிக்கப்படுவது உண்டு. கடமைகளைச் செய்யும்போது சில வேளைகளில் சொந்த நலன்களைத் தியாகம் செய்யவேண்டி ஏற்படுவது உண்டு. மாறாகத் தன்னலம் கருதியும் கடமையைச் செய்வதும் உண்டு.
 
நீண்ட காலத்துக்கு முன் வாழ்ந்த உரோம மெய்யியலாளரான சிசேரோ, கடமை நான்கு மூலங்களில் இருந்து ஏற்படக்கூடும் எனக் குறிப்பிடுகின்றார். அவையாவன:
 
அதிகாரம், மதம், சமூக நெறிமுறைகள் ஆகியவற்றைப் பொறுத்து, சட்டத்தினாலோ பண்பாட்டினாலோ விதிக்கப்படும் கடமைகள் பெருமளவு வேறுபட்டு அமைகின்றன.
 
== குடிசார் கடமைகள் ==
ஒருவர் தனது நாட்டுக்கும், தேசத்துக்கும், சமூகத்துக்கும் செய்யவேண்டிய கடமைகள் குடிசார் கடமைகள் எனப்படுகின்றன.
 
* சட்டத்துக்குக் கீழ்ப்படிதல்
* வரிகளைக் கட்டுதல்
* தேவை ஏற்படும்போது பொதுப் பாதுகாப்புக்குப் பங்களிப்புச் செய்தல்
* வாக்களிப்பதற்குப் பெயரைப் பதிவுசெய்து எல்லாத் தேர்தல்களிலும், பொதுவாக்கடுப்புக்களிலும் வாக்களித்தல்
* கோரப்பட்டால் நடுவர் குழுவில் பணிபுரிதல்
* விபத்துக்களாலும், தெருக் குற்றங்களாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதலும், பின்னர் நீதிமன்றில் சாட்சி சொல்லுதலும்
* தொற்றுநோய்கள் பற்றிச் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்தல்
* பொதுச் சேவை செய்வதற்கு முன்வருதல்
* காலத்துக்குக் காலம் அல்லது தேவைப்படும்போது குருதிக் கொடை அளித்தல்
* நீதியற்ற அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுதல்
 
போன்றவை குடிசார் கடமைகளுக்குள் அடங்குகின்றன.
 
[[பகுப்பு:சமூகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2528195" இருந்து மீள்விக்கப்பட்டது