"கடமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,762 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
== பிள்ளைகளுக்கான கடமைகள் ==
பெரும்பாலான பண்பாடுகளில், பிள்ளைகள் தமது குடும்பங்கள் தொடர்பிலான கடமைகளைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர். நோயுற்ற உறவினர்களைக் கவனித்துக்கொள்வது முதல், சமூகத்தில் குடும்பத்தின் மதிப்பைப் பேணும் விதத்தில் நடந்துகொள்ளுதல், குடும்த தகுதிக்கு ஏற்றபடி பெற்றோர் சொற்படி திருமணம் செய்தல் போன்றவை வரை பிள்ளைகளின் கடமைகள் பலவிதமான வடிவங்களை எடுக்ககூடும். குடும்பம் சார்ந்த கடமை உணர்வு கான்பியூசியசின் போதனைகளில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பல நூற்றாண் டுகளாகவே பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள், கிழக்காசிய நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வில் பெரும் பங்கு வகிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்தியப் பண்பாட்டிலும் குடும்பம் தொடர்பான பல்வேறு கடமைகள் பிள்ளைகளுக்கு இருப்பதைக் காணமுடியும். இந்தியாவின், சமய நூல்களும், ஒழுக்கத்தை வலியுறுத்தும் நூல்களும் பெற்றோரைப் பேணுதல் பிள்ளைகளின் உயர்வான கடமையாகக் கூறுகின்றன. அத்துடன், பிள்ளைகள், குறிப்பாகக் குடும்பத்தில் மூத்த பிள்ளைகள் தமது உடன்பிறப்புக்களைப் பேணி நன்னிலைக்குக் கொண்டுவருவதைக் கடமையாகச் செய்து வருவதை இன்றும் காணலாம்.
 
== பல்வேறு பண்பாடுகளில் கடமை ==
பண்பாடுகளையும் பிரதேசங்களையும் பொறுத்துக் கடமைகள் பெருமளவில் வேறுபடுவதைக் காணலாம். மேனாட்டுப் பண்பாடுகளிலும் பார்க்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் குடும்பம் தொடர்பான கடமைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
 
[[பகுப்பு:சமூகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2528272" இருந்து மீள்விக்கப்பட்டது