→பல்வேறு பண்பாடுகளில் கடமை
மைக்கேல் பெலெட்சு என்பவர் தான் எழுதிய '' நவீன ஆசியாவில் பாலும், பால் தன்மையும், உடல்சார் அரசியலும்'' என்னும் நூலில் கடமைபற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
: " விசுவாசம், உழைப்பு ஆற்றல், பிள்ளைகளால் கிடைக்கக்கூடிய பிற வளங்கள் ஆகியவற்றைக் குடும்பத்தின் நன்மைக்காக, சில வேளைகளில் முழுக் கால்வழிக் குலத்தின் நன்மைக்காகத் திரட்டுவதற்காகப் பிள்ளைகளின் கடமை என்னும் கருத்தமைவு பயன்படுத்தப்படுகின்றது. பெற்றோர் மீதான பிள்ளைகளின் பக்தி என்னும் கொள்கை பெரியவர்களுக்கு ஆறுதலையும், மன அமைதியையும் கொடுத்தாலும், தமது பெற்றோர்களின் விருப்பங்களையும், சொல்லப்படாத எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு முயல்பவர்களுக்கு அயர்ச்சியையும், அடக்கப்படும் அனுபவத்தையும் கொடுக்கக்கூடும்."
== மேற்கோள்கள் ==
|