கடமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
: " விசுவாசம், உழைப்பு ஆற்றல், பிள்ளைகளால் கிடைக்கக்கூடிய பிற வளங்கள் ஆகியவற்றைக் குடும்பத்தின் நன்மைக்காக, சில வேளைகளில் முழுக் கால்வழிக் குலத்தின் நன்மைக்காகத் திரட்டுவதற்காகப் பிள்ளைகளின் கடமை என்னும் கருத்தமைவு பயன்படுத்தப்படுகின்றது. பெற்றோர் மீதான பிள்ளைகளின் பக்தி என்னும் கொள்கை பெரியவர்களுக்கு ஆறுதலையும், மன அமைதியையும் கொடுத்தாலும், தமது பெற்றோர்களின் விருப்பங்களையும், சொல்லப்படாத எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு முயல்பவர்களுக்கு அயர்ச்சியையும், அடக்கப்படும் அனுபவத்தையும் கொடுக்கக்கூடும்."<ref>Peletz, Michael G. Gender, Sexuality, and Body Politics in Modern Asia. Ann Arbor: Association for Asian Studies, 2011. Print.</ref>
 
ஆசியாவிலும், மத்தியகிழக்கு நாடுகளிலும், பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணம் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கப்படும் கடமைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ஒன்றில், பெண் கணவன் வீட்டுக்குச் சென்று வாழ்வதும் அங்கே பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதும் அவளது கடமையாகக் கருதப்படுகிறது. மிகச் சில பகுதிகளிலேயே ஆண் பெண் வீட்டுக்குச் சென்று வாழும் வழக்கம் உள்ளது. பெண் தனது கணவன் வீட்டில் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பது மட்டுமன்றிக் கணவனும் மனைவியும் கணவனின் குடும்பத்துக்கே உழைப்பைக் கொடுப்பது கடமையாகும். மூத்த தலைமுறையினர் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் குடும்பங்களிலேயே பெரிதும் தங்கியிருக்கின்றனர். குடும்பத்தின் கால்வழியைச் சிதையாமல் வைத்திருப்பதும், முதியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுமே இவ்வகைக் கடமையின் நோக்கங்களாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கடமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது