பர்பர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
வட ஆப்பிரிக்காவில் வாழும் பேர்பர்கள் பெரும்பாலும், லிபியா, அல்சீரியா, துனீசியா, மொரோக்கோ ஆகிய நாடுகளிலேயே வாழ்கின்றனர். சிறிய அளவிலான பேர்பர் மக்கள் நைகர், மாலி, மௌரித்தானியா, புர்க்கினா பாசோ, எகிப்து ஆகிய நாடுகளிலும், புலம்பெயர் சமூகமாக, பிரான்சு, இசுப்பெயின், கனடா, பெல்சியம், நெதர்லாந்து, செருமனி மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்கின்றனர்.
 
பெரும்பான்மையான பேர்பர் மக்கள் சுன்னி முசுலிம்கள் ஆவர். பேர்பர் அடையாளம், பெரும்பாலும் மொழி, இனம் ஆகியவற்றுக்கும் அப்பால் பரந்து காணப்படுவதுடன், அது வட ஆப்பிரிக்காவின் முழு வரலாற்ரையும், புவியியலையும் தழுவியதாக உள்ளது. பேர்பர்கள், ஓரினத் தன்மை கொண்டவர்களாக இல்லாமல், பல்வேறுபட்ட சமூகங்களையும், குல மரபுகளையும் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். பேர்பர்களை ஒன்றிணைக்கும் விடயம் பொது மொழியாகவோ, பொதுவான மரபுரிமை அல்லது வரலாறாகவோ இருக்கக்கூடும்.
 
வட ஆப்பிரிக்காவில், ஏறத்தாழ 25 மில்லியன் முதல் 30 மில்லியன் வரையிலான பேர்பர் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலான பேர்பர்கள் கடந்த பல பத்தாண்டுகள் அல்லது நூற்றாண்டுகளுக்கூடாகப் பிற மொழிகளைப் பேசி வருவதுடன், பேர்பர் மொழியை அறியாதவர்களாக இருப்பதால், பேர்பர் அல்லாத மொழிகளைப் பேசுபவர்களும் உள்ளிட்ட இன அடிப்படையிலான பேர்பர்கள் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கக்கூடும். பெரும்பான்மை வட ஆப்பிரிக்க மக்கள் பேர்பர் மூலத்தைக் கொண்டவர்கள் எனக் கருதப்படுகின்றது. ஆனாலும், அரேபியமயமாக்கலினால் பெரும்பாலான பேர்பர் இனத்தவர் தம்மை அரேபியமயமான பேர்பர்களாக அடையாளம் காண்கின்றனர்.
 
[[பகுப்பு:ஆப்பிரிக்க இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பர்பர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது