பர்பர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பேர்பர்கள்''' (Berbers) என்போர், வட ஆப்பிரிக்காவை, முதன்மையாக [[அல்சீரியா]], வடக்கு [[மாலி]], [[மௌரித்தானியா]], [[மொரோக்கோ]], வடக்கு [[நைகர்]], [[துனீசியா]], [[லிபியா]], மேற்கு எகிப்தின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்ட ஒரு இனக் குழுவினர் ஆவர். அத்திலாந்திக் பெருங்கடலில் இருந்து எகிப்தில் உள்ள சிவா பாலைவனச் சோலை வரையும், நடுநிலக் கடலில் இருந்து மேற்கு ஆப்பிரிக்காவின் நைகர் ஆறு வரையும் உள்ள ஒரு பகுதியில் பேர்பர்கள் பரவியுள்ளனர். முற்காலத்தில் இவர்கள், ஆப்பிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் பேர்பர் கிளையைச் சேர்ந்த பேர்பர் மொழிகளைப் பேசி வந்தனர். ஏழாம் நூற்றாண்டில் வடக்கு ஆப்பிரிக்காவை முசுலிம்கள் கைப்பற்றியதில் இருந்து, மக்ரெப்பில் வாழ்ந்த பேர்பர்கள் வெவ்வேறு அளவுகளில் வட ஆப்பிரிக்காவில் பேசப்பட்ட பிற மொழிகளைப் பொது மொழியாகப் பயன்படுத்தத் தொடங்கினர். வட ஆப்பிரிக்காவின் பகுதிகள் பிரான்சின் குடியேற்றப் பகுதிகளான பின்னர், பிரெஞ்சு மொழியை அல்சீரியாவின் உத்தியோகபூர்வ தேசிய மொழியாக ஆக்கியதன் மூலமும், கல்வி பிரெஞ்சு மொழியிலேயே கற்கப்படவேண்டும் என விதித்ததன் மூலமும், அங்கே பிரெஞ்சு மொழியைப் புகுத்துவதில் பிரெஞ்சு அரசாங்கம் வெற்றி கண்டது.<ref name="forcedFrench">{{cite book|last1=Briggs|first1=Carina Lynn|title=Language, Identity, and Literary Expression in Algeria|date=2010|publisher=University of North Carolina|location=Chapel Hill|url=https://cdr.lib.unc.edu/indexablecontent/uuid:ef08d614-090d-459d-85f0-97d8135f8183|accessdate=12 November 2014}}</ref> முன்னைய குடியேற்றவாத ஆட்சியாளர்களூடாகப் புகுத்தப்பட்ட வெளி மொழிகளான, முதன்மையாக பிரெஞ்சும், ஓரளவு இசுப்பானிய மொழியும் இன்றும் அல்சீரியாவிலும், மொரோக்கோவிலும், உயர் கல்வி, வணிகம் போன்ற தேவைகளுக்குப் பயன்பட்டு வருகின்றன.
 
வட ஆப்பிரிக்காவில் வாழும் பேர்பர்கள் பெரும்பாலும், லிபியா, அல்சீரியா, துனீசியா, மொரோக்கோ ஆகிய நாடுகளிலேயே வாழ்கின்றனர். சிறிய அளவிலான பேர்பர் மக்கள் நைகர், மாலி, மௌரித்தானியா, புர்க்கினா பாசோ, எகிப்து ஆகிய நாடுகளிலும், புலம்பெயர் சமூகமாக, பிரான்சு, இசுப்பெயின், கனடா, பெல்சியம், நெதர்லாந்து, செருமனி மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்கின்றனர்.<ref name="battle">[http://www.sfgate.com/cgi-bin/article.cgi?file=/chronicle/archive/2001/03/16/MN145053.DTL Morocco's Berbers Battle to Keep From Losing Their Culture]. San Francisco Chronicle. March 16, 2001.</ref><ref>[http://www.bbc.co.uk/worldservice/people/highlights/010423_berbers.shtml Berbers: The Proud Raiders]. [[BBC World Service]].</ref>
 
பெரும்பான்மையான பேர்பர் மக்கள் சுன்னி முசுலிம்கள் ஆவர்.<ref>https://www.britannica.com/topic/Berber</ref> பேர்பர் அடையாளம், பெரும்பாலும் மொழி, இனம் ஆகியவற்றுக்கும் அப்பால் பரந்து காணப்படுவதுடன், அது வட ஆப்பிரிக்காவின் முழு வரலாற்ரையும், புவியியலையும் தழுவியதாக உள்ளது. பேர்பர்கள், ஓரினத் தன்மை கொண்டவர்களாக இல்லாமல், பல்வேறுபட்ட சமூகங்களையும், குல மரபுகளையும் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். பேர்பர்களை ஒன்றிணைக்கும் விடயம் பொது மொழியாகவோ, பொதுவான மரபுரிமை அல்லது வரலாறாகவோ இருக்கக்கூடும்.
 
வட ஆப்பிரிக்காவில், ஏறத்தாழ 25 மில்லியன் முதல் 30 மில்லியன் வரையிலான பேர்பர் மக்கள் வாழ்கின்றனர்.<ref name="Berber speakers">{{cite web |url=http://www.foxnews.com/world/2012/05/05/north-africa-berbers-get-boost-from-arab-spring/ |title=North Africa's Berbers get boost from Arab Spring |publisher=[[Fox News Channel|Fox News]] |date=5 May 2012 |accessdate=8 December 2013}}</ref> பெரும்பாலான பேர்பர்கள் கடந்த பல பத்தாண்டுகள் அல்லது நூற்றாண்டுகளுக்கூடாகப் பிற மொழிகளைப் பேசி வருவதுடன், பேர்பர் மொழியை அறியாதவர்களாக இருப்பதால், பேர்பர் அல்லாத மொழிகளைப் பேசுபவர்களும் உள்ளிட்ட இன அடிப்படையிலான பேர்பர்கள் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கக்கூடும். பெரும்பான்மை வட ஆப்பிரிக்க மக்கள் பேர்பர் மூலத்தைக் கொண்டவர்கள் எனக் கருதப்படுகின்றது. ஆனாலும், அரேபியமயமாக்கலினால் பெரும்பாலான பேர்பர் இனத்தவர் தம்மை அரேபியமயமான பேர்பர்களாக அடையாளம் காண்கின்றனர்.<ref name="The World Factbook">{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2075.html|title=Ethnic groups|publisher=The World Factbook}}</ref><ref>{{cite web|url=http://looklex.com/e.o/berbers.htm|title=Berbers|author=Tore Kjeilen|publisher=LookLex Encyclopaedia}}</ref>
 
பேர்பர்கள் தம்மை "இ-மசி-என்" (i-Mazigh-en) என்னும் சொல்லினாலும் அதன் சில வேறுபாடுகளாலும் அழைக்கின்றனர். இது "சுதந்திரமான மக்கள்" அல்லது "உயர்குடி மக்கள்" என்ற பொருளை உடையதாக இருக்கக்கூடும். இச்சொல், கிரேக்க, உரோமர் காலங்களில் பேர்பர்களை அழைக்கப் பயன்படுத்திய "மசிசெஸ்" என்பதற்கு இணையானதாக இருக்கலாம்.<ref name="Lipiński2001">{{cite book|author=Lipiński, Edward |title=Semitic Languages: Outline of a Comparative Grammar|url=https://books.google.com/books?id=IiXVqyEkPKcC&pg=PA38|year=2001|publisher=Peeters Publishers|location=Leuven|isbn=978-90-429-0815-4}} page 38.</ref> நன்கு அறியப்பட்ட பழங்கால பேர்பர்களுள், நுமிடிய அரசர் மசினிசா, அரசர் யுகுர்த்தா, பேர்பர்-உரோம எழுத்தாளர் அப்புலெயியசு, இப்போவின் செயின்ட் அகசுத்தீன், பேர்பர்-உரோமத் தளபதி லுசியசு குயியெட்டசு ஆகியோர் அடங்குவர்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஆப்பிரிக்க இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பர்பர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது