துருக்கிய மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''துருக்கிய மக்கள்''' அல்லது '''துருக்கியர்''' என்போர், ஒரு துர்க்கிக் இனக்குழுவினரும் நாட்டினமும் ஆவர். இவர்களை '''அனத்தோலியத் துருக்கியர்''' எனவும் அழைப்பதுண்டு. இவர்கள் பெரும்பாலும் துருக்கியில்தற்காலத் [[துருக்கி]]யில் வாழ்கின்றனர். அதிக அளவில் பேசப்படும் துர்க்கிக் மொழியான [[துருக்கிய மொழியைப்மொழி]]யைப் பேசுகின்றனர். துருக்கியின் மிகப் பெரிய இனக்குழுவாக இருக்கும் இவர்கள், துர்க்கிக் மொழிகளைப் பேசுவோரில் பெரும்பான்மையாகவும் உள்ளனர். முன்னைய ஓட்டோமான் பேரரசின் கீழிருந்த சில பகுதிகளில் இவர்கள் இன்னும் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். அத்துடன், தற்காலப் புலப்பெயர்வுகளினூடாகவும் துருக்கிய மக்கள் பலர் ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறியுள்ளனர்.
 
11 ஆம் நூற்றாண்டில், மத்திய ஆசியாவில் இருந்து வந்த துருக்கியர், செல்யுக் துருக்கரின் நிலங்களை ஆக்கிரமித்ததன் மூலம், அனத்தோலிய வடிநிலத்தில் குடியேறினர். இதன் பின்னர் கிரேக்கக் கிறித்தவப் பகுதியாக இருந்த இப்பகுதி துருக்கிய முசுலிம் சமூகம் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக மாறியது. அதன் பின்னர், பல நூற்றாண்டுகளூடாக பால்கனின் பெரும்பகுதி, காக்கேசியப் பகுதி, ஈரான் தவிர்ந்த மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா ஆகியவற்றைக் கைப்பற்றிய துருக்கியர் மேம்பட்ட தரைப்படை, கடற்படைகளுடன் ஓட்டோமான் பேரரசை நிறுவினர். இப்பேரரசு [[முதலாம் உலகப் போர்]] வரை நிலைத்திருந்தது. இப்போரில், கூட்டுப் படைகளிடம் தோல்வியடைந்த ஓட்டோமான் பேரசு, பின்னர் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. வெற்றிகரமாக முடிவடைந்த துருக்கிய விடுதலைப் போரைத் தொடர்ந்து, போரை நடத்திய துருக்கிய தேசிய இயக்கம், முன்னர் கூட்டுப்படைகளிடம் இழந்த பெரும்பாலான துருக்கியின் பகுதிகளை மீட்டது. இவ்வியக்கம், 1922 நவம்பர் 1 ஆம் தேதி ஓட்டோமான் சுல்தானகத்தை அகற்றிவிட்டு, 1923 அக்டோபர் 29 இல் "துருக்கிக் குடியரசை" நிறுவியது. அல்லா ஓட்டோமான்களும் முசுலிம்களும் அல்ல, எல்லா ஓட்டோமான் முசுலிம்களும் துருக்கியரும் அல்ல. ஆனால் 1923 அளவில் புதிய துருக்கிக் குடியரசின் எல்லைகளுக்குள் வாழ்ந்த பெரும்பாலானவர்கள் துருக்கியர் என அடையாளப்படுத்தப்பட்டனர்.
 
[[பகுப்பு:ஆசிய இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/துருக்கிய_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது