பில்லி ஜீன் கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
'''பிரசிடெண்ட் மெடல் ஆப் பிரிடம்''' என்ற அமெரிக்காவின் உயரிய விருதையும் சண்டை டைம்சு இதழின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார். 2006இல் [[நியூ யார்க்கு|நியூ யார்க்கிலுள்ள]] [[யூ.எசு. ஓப்பன்|யூஎசு ஓப்பன்]] நடைபெறும் திடல்களின் மையத்திற்கான பெயர் பெல்லி சீன் கிங் தேசிய டென்னிசு மையம் என மாற்றப்பட்டது.
 
==தொடக்கஇளவயது வாழ்க்கை ==
 
கிங் பெட்டிக்கும் தீயணைப்பு வீரரான பில் மோட்டிவ்க்கும் [[லாஸ் ஏஞ்சலஸ்|லாசு ஏஞ்சல்சு]] பெருநகரிலுள்ள [[லாங் பீச் (கலிபோர்னியா)|லாங் பீச்சில்]] மரபு மாறா [[மெதடிசம்]] குடும்பத்தில் பிறந்தார். கிங்கின் குடும்பம் விளையாட்டில் ஆர்வமுள்ளது. இவரின் தாய் நீச்சலில் சிறந்தவர். தந்தை கூடைபந்து அடிப்பந்தாட்டம் (baseball) வீரரும் ஓட்ட வீரரும் ஆவார், இவரின் இளைய சகோதரர் ரேண்டி மோட்டிவ் ஊசுடன் அசுட்ரோசு, சான் பிரான்சிசுகோ செயண்ட், டோறண்டோ புளு சேசு போன்ற பெரும் அடிபந்தாட்ட கூட்டமைப்பில் 12 ஆண்டுகள் பந்துவீச்சாளராக இருந்தார். பெல்லி சீனும் அடிப்பந்தாட்டத்தில் (பெண்களுக்கானது பந்து ஆண்களுக்கானது போல் கடினமாக இருக்காது) வல்லவராக இருந்தார். 10 வயது சிறுமியாக இருந்தபோது அவரை விட 4-5 வயது பெரியவர்களின் குழுவில் மாற்று ஆட்டக்காரக இருந்தார். அந்த அணி லாங் பீச்சில் பல அணிகள் கலந்து கொண்ட அடிபாந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்றது.
வரிசை 56:
 
பெல்லி சீன் லாங் பீச் பல்நுட்பியல் கல்லூரியில் படித்தார் பின் லாசு ஏஞ்சல்சிலுள்ள கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் படித்தார். 1964இல் டென்னிசில் முழு கவனத்தையும் செலுத்த படிப்பை முடிக்காமலே வெளியேறினார். பல்கலைக்கழகத்தில் படித்த போது நூலகத்தில் லாரி கிங்கை சந்தித்தார், படிக்கும் போதே அவர்கள் நிச்சயம் செய்து கொண்டார்கள். அப்போது பெல்லி சீனின் வயது 20 லாரி கிங்கின் வயது 19. அவர்கள் 17 செப்டம்பர் 1965இல் லாங் பீச்சில் திருமணம் புரிந்து கொண்டார்கள்.
 
 
==திருமண வாழ்க்கை==
பில்லி சீனும் லாரி கிங்கும் 1964 இல் திருமண உறுதியேற்பு செய்து கொண்டு 1965 நவம்பர் 17இல் லாங் பீச்சில் திருமணம் புரிந்து கொண்டார்கள். பில்லி
சீனுக்கு லாரி கிங் பெண்ணியத்தை அறிமுகப்படுத்தியதோடு டென்னிசை தொழிலாக கொள்ள ஊக்கப்படுத்தினார். பில்லி சீன் தான் திருமணம் புரிந்த
சமயம் லாரியுடன் மிகுந்த காதல் கொண்டிருந்ததாக பின் கூறினார்.
 
1968இல் கிங் தான் பெண்களின் மீது ஈர்ப்பு கொண்டிருப்பதை உணர்ந்தார். 1971இல் தன் செயலாளர் மர்லின் பர்நெட்டுடன் உடல் அளவிலும் நெருக்கமான
உறவு வைத்திருந்தார். மர்லின் 1948இல் பிறந்தவர். இவர்கள் உறவு பொதுவுக்கு பர்நெட் பில்லி கிங்கின் சொத்தில் பங்கு கேட்டபின் வந்தது, வந்தபின்
பில்லி கிங் இந்த உறவை ஒப்புக்கொண்டார். பில்லி கிங்கே ஆண் பெண் உறவு வைத்திருந் முதல் தொழில் முறை ஆட்டக்கார பெண் என இந்த
வழக்கால் அறியப்படுகிறார். இந்த வழக்குக்கு ஓர் ஆண்டு முன்பு தான் தான் மாற்று பால் இனத்தவர் என்று அறிகிறார். முழு உறவையும் வெளியில்
சொல்லாமல் ஒரு முறை மட்டும் தவறு நேர்ந்ததாகவும் பொதுவில் கூறினார். அப்போதும் லாரி கிங்குடன் மண வாழ்வு தொடர்ந்தது. இந்த வழக்கால்
பில்லி கிங்குக்கு 2 மில்லியன் டாலர் விளம்பரதாரர்கள் இவரிடம் இருந்து விலகியதின் மூலம் இழப்பு ஏற்பட்டது மேலும் வழக்கறிஞருக்கு பணம்
தரவேண்டி இவர் அதிக காலம் டென்னிசு விளையாடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.
 
சொத்து கேட்டு பர்நெட் தொடர்ந்த வழக்கு முடியும் வரை பில்லி சீனும் லாரி கிங்கும் கணவன் மனைவியாகவே இருந்தார்கள். 1987இல் பில்லி சீன் தன்
டென்னிசு இரட்டையர் இணை இலனா கிலாசுடன் காதலில் விழுந்ததும் பில்லி சீன் லாரி கிங் திருமண வாழ்வு முறிந்தது
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பில்லி_ஜீன்_கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது